பப்புவா நியூ கினியா நிலச்சரிவு பலி உயர்வு: 300 பேர் உறங்கிக்கொண்டே உயிரைவிட்ட பரிதாபம்..!
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 300 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உறங்கி கொண்டிருந்த சமயத்தில் கிராம மக்கள் அனைவரும் மண்ணில் புதைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா.
இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கிராம மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் பாறைகளும், மரங்களும் அடியோடு பெயர்ந்து கிராமத்தில் இருந்த குடியிருப்புகள் மீது விழுந்தன. முழு கிராமமும் மண்ணுக்குள் புதைந்தன. 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. நிலச்சரிவால் கிராமத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
6 கிராமங்கள் பாதிப்பு
இந்த பேரிடர் குறித்து அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி, ”பேரிடர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் 6 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
2,704 comments