15.6 C
Munich
Sunday, October 27, 2024

குழந்தைகளின் உணவில் விளையாடிய சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

குழந்தைகளின் உணவில் விளையாடிய சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

Last Updated on: 15th June 2024, 09:33 pm

குழந்தைகள் உணவுக்கு பிரபலமான, சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட நெஸ்லே நிறுவனம், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.அந்நிறுவனத் தயாரிப்பான Cerelac என்னும் குழந்தைகள் உணவில் மோசடி செய்தது தொடர்பாக, அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உணவில் விளையாடிய நிறுவனம்சில நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேவின் முன்னணி குழந்தைகள் உணவான Cerelacஇல் அதிக அளவு சர்க்கரை இருப்பது சுவிட்சர்லாந்தில் உள்ள Public Eye மற்றும் International Baby Food Action Network என்னும் அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, அமெரிக்கா, ஐரோப்பா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் சர்க்கரை சேர்க்காமல் இந்த தயாரிப்புகளை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விற்கப்படும் Cerelac தயாரிப்புகளில் அதிக அளவு சர்க்கரை சேர்த்து விற்பனை செய்கிறது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கைஆகவே, இப்படி ஒரே உணவுப்பொருளை வெவ்வேறு தரத்தில் விற்பனை செய்யும் (double standards) நெஸ்லே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு Public Eye மற்றும் International Baby Food Action Network ஆகிய அமைப்புகள் கோரியுள்ளன.

அந்த இரண்டு நிறுவனங்களும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நெஸ்லே நிறுவனம் மேற்கொள்ளும் நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற வர்த்தக செயல்முறைகளுக்காக, அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாண செயலகத்தில் முறைப்படி விண்ணப்பம் செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here