இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையேயான சர்ச்சை நடக்கும் இந்த நேரத்தில், உலகமக்கள் பலரையும் மாலத்தீவு ஈர்த்து எப்படி? சுற்றுலாவாசிகளின் சொர்கபுரியாக மாறியது எப்படி என்பது குறித்து ஒரு அலசல்.பல தீவுகள் அடங்கிய மாலத்தீவு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் நிலப்பரப்புகளுக்கு பிரபலமடைந்தது.இதனாலேயே இந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாகவும் மாறியது.சுற்றுலாவே மாலத்தீவுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், அதனை மேலும் விரிவுபடுத்த, அந்நாடு விசா கொள்கைகளை தளர்த்தியது.மாலத்தீவின் விசா கொள்கை காரணமாக அதன் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான, இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் கஜகஸ்தான் போன்றவற்றிற்கு விசா-இன்றி அனுமதி அளித்தது மாலத்தீவு.
பிரபலங்களுடன் கூட்டு சேர்ந்து மார்க்கெட்டிங்மேலே குறிப்பிட்ட நாடுகளை தவிர மற்ற உலக நாடுகளுக்கு, விசா ஆன் அரைவல் (Visa-on-Arrival) விதியை அறிமுகம் செய்தது.இதுவும் உலக நாடுகளை ஈர்க்க உதவியது மாலத்தீவில் உள்ள அநேக தீவுகளில் ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளது.அது திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள செல்வாக்கு செலுத்துபவர்களை ஈர்த்து வருகிறது.இந்த மூலோபாயம் ஒரு பெரிய செல்வாக்குமிக்க சந்தைப்படுத்தல் போக்கின் ஒரு பகுதியாகும்,ஹோட்டல் உரிமையாளர்கள், இத்தகைய சமூக ஊடக பிரபலங்களுடன் இணைந்து மார்க்கெட்டிங் செய்ய துவங்கினர்.அதுவும் மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களை சென்றடைவதற்கு உதவியது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.