7.9 C
Munich
Monday, October 7, 2024

வட கொரிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் சிந்திய அதிபர் கிம் ஜாங் உன்

வட கொரிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் சிந்திய அதிபர் கிம் ஜாங் உன்

Last Updated on: 9th December 2023, 05:50 pm

சர்வாதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் பெயர் போன வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இன்று பொதுமக்கள் உரையாற்றிக் கொண்டிருந்த போதே தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியாவை பொறுத்தவரை அதிபர் சிரித்தால் தாங்களும் சிரிக்க வேண்டும், அழுதால் தாங்களும் அழ வேண்டும் என எழுதப்படாத சட்டம் இருப்பதால் அங்கு குழுமியிருந்த மக்களும், அதிகாரிகளும் ஒப்பாரி வைக்க தொடங்கினா்.

இந்த 21-ம் நூற்றாண்டிலும் மிக வித்தியாசமான சட்டத்திட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டிருக்கும் நாடு தான் வடகொரியா. உலகமே புதுப்பது தொழில்நுட்பங்களிலும், நவீன மின்னணு சாதனங்களிலும் திளைத்துக் கொண்டிருக்க வட கொரிய மக்களுக்கு தெரிந்தது எல்லாம் பழைய டிவி பெட்டிகள் தான்.வட கொரியாவில் இன்டர்நெட் கிடையாது, பல வகையான தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது. ஒரே ஒரு அரசு தொலைக்காட்சி சேனல் மட்டும் தான் இருக்கும். அதிலும் நிதமும் அதிபரின் உரை தான் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும். திரைப்படங்கள் எல்லாம் கிடையாது.

அதுமட்டுமல்லாமல், அதிபரின் தந்தை இறந்த தினத்தை அந்நாடே துக்க தினமாக அனுசரிக்க வேண்டும். யாரும் சிரிக்கக்கூடாது. மறந்து சிரித்து மாட்டிக் கொண்டால், சிறைத்தண்டனை எல்லாம் கிடையாது. நேராக எமலோகத்திற்கு டிக்கெட் கொடுத்து விடுவார்கள். அப்படியொரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருபவர் தான் கிம் ஜாங் உன்.

இப்படி மிக கடுமையான சட்டத்திட்டங்களை கொண்ட வட கொரியா தற்போது ஒரு மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டு இருக்கிறது. அதுதான் மக்கள்தொகை குறைவு. இந்தியா அதிக அளவிலான மக்கள் தொகையால் திணறிக் கொண்டிருக்கிறது என்றால், வட கொரியா குறைந்த அளவிலான மக்கள்தொகையால் கதறிக் கொண்டிருக்கிறது.

அங்குள்ள பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சதவீதம் மிகக் குறைவான சதவீதத்தில் உள்ளது. அதேபோல, ஆண் பெண் மலட்டுத் தன்மையும் அங்கு அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலை இப்படியே நீடித்தால், எதிர்காலத்தில் வட கொரியா என்ற ஒரு நாடே இருக்காது என்கிற நிலைமை ஏற்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வட கொரியாவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அதிபர் கிம்ஜாங் உன் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மோசமான அளவில் சரிவடைந்து வருகிறது. இது வட கொரியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனை தடுத்து நிறுத்தும் வல்லமை நமது பெண்களுக்கு மட்டுமே உள்ளது. பெண்கள் அதிக அளவிலான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். தாய்மையின் பலத்தை நாம் காட்ட வேண்டும். அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டும் என பேசினார். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவர் கண்கலங்கினார்

அதிபர் அழுவதை பார்த்த அங்கிருந்த பெண்களும், அதிகாரிகளும் அழுகை வருகிறதோ இல்லையோ, கத்தி ஒப்பாரி வைத்தனர். அதிபர் அழும் போது யாராவது அழவில்லை என்றால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடுமே என்கிற பயத்தில் தான் இப்படி கதறி இருக்கிறார்கள். நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தானே, அவர்கள் குடும்பமாக வசிப்பதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் நடக்கும். ஏதோ மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களை நடத்துவதை போல மக்களை நடத்தினால், எங்கிருந்து மகிழ்ச்சி இருக்கும் என பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here