Last Updated on: 11th May 2024, 06:29 pm
ஜப்பான் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டின் மொத்த குடியரசு சொத்துக்களில் கைவிடப்பட்ட வீடுகள் மட்டும் 13.8% இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
இந்த அக்கியா வீடுகளில் வசிப்பவர்கள் மரணித்தபிறகு, சொத்தில் பாதி சம்பந்தப்பட்ட நபரின் கணவன் அல்லது மனைவிக்கு கொடுக்கப்படவேண்டும். மீதம் அவர்களின் வாரிசுகளுக்கும் வழங்கப்படவேண்டும். ஆனால், சொத்தை ஒப்படியாக்க மரணமடைந்தவர்களின் வாரிசுகளை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஜப்பானில் ஏற்பட்டிருக்கிறது. இதனாலும் ஜப்பானில் அதிகப்படியான வீடுகள் ஆதரவற்று போகிறது என அந்நாடு கவலை தெரிவித்து இருக்கிறது.
கேட்பாரற்று கிடக்கும் வீடுகள்பணிகளில் இருப்பவர்கள் பணி ஓய்வுக்கு பிறகு வழங்கப்படும் வீடுகளுக்கு குடிபெயறுகிறார்கள். மேலும், பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்கிறார்கள். ஆனால், அவர்கள் திரும்பி நாடு வருவதில்லை. இவர்களின் வீடுகளும் ஆதரவற்று போகிறது. இந்த போக்கு அந்நாட்டின் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், இப்போது நகர மக்களும் இதனை பின்பற்றுவதாக கூறபட்டு இருக்கிறது.
மேலும், ஜப்பான் நாட்டில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பிறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் இருக்கிறதாம். இதனால், அந்நாட்டு மக்கள் தொகையில் கடுமையான வீழ்ச்சி இருந்துவருகிறது. ஜப்பான் நாட்டின் கண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து வருவதன் அறிகுறி இது.. உண்மையில் அதிகமான வீடுகளை கட்டுவதால் இந்த பிரச்சனை ஏற்படுவதில்லை.. ஆனால், கட்டிய வீடுகளில் இருக்க ஆட்கள் இல்லை என்பதே முக்கிய பிரச்சனை என்றார்.
சிக்கலில் ஜப்பான் அந்த வகையில் கடந்த 13 ஆண்டுகளாக ஜப்பானின் மக்கள் தொகை கடுமையான சரிவை சந்தித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. கேட்பாரபற்று இருக்கும் இந்த அக்கியா வீடுகளால் ஜப்பான் நாடு வளர்ச்சியை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், இதே சூழல் தொடருமானால் கண்டிப்பாக ஜப்பான் அதிகப்படியான பிரச்சினையை சந்திக்கக்கூடும் என அந்நாடே தெரிவித்து இருக்கிறது