Last Updated on: 2nd October 2024, 05:08 pm
ஈரான் தாக்குதல் காரணமாக லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் சென்னைக்கு வர தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல், லெபனான், சிரியா, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் லண்டனில் இருந்து சென்னைக்கு கிளம்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் துருக்கியில் இருந்து மத்திய தரை கடல் வழியாக ரியாத் நகரத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அதிகாலை 3:30 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய விமானம் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை போலவே நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தாமதமாகியுள்ளன.