விபத்தில் இறந்த ஈரான் அதிபர்; உடனடியாக புதிய அதிபர் தேர்வு..!
டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது முக்பர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.ஈரான் நாட்டு பிரதமர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அனைவரது உடல்களும் கருகி போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில், ஈரான் அதிபர் இப்ராஹிம் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உயிரிழந்தனர்.ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் துணை அதிபர் முகமது முக்பர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.
1 comment