Last Updated on: 29th February 2024, 08:45 pm
World Bizarre News: இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரின் கில்லிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த சாரா ஹெட்ஜஸ். 40 வயதான சாரா, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு இரவில் அவரது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மும்முரமாக சமைத்துக்கொண்டிருந்த போது, அவரின் கவனம் திடீரென அவரது 3 வயது மகனான தாமஸ் மீது சென்றுள்ளது. அந்த நேரத்தில், தாமஸின் கண்களில் பூனையின் கண்களில் காண்பது போன்ற திடீர் வெள்ளை நிற பளபளப்பு தெரிவது சாராவின் பார்வைக்கு தெரிந்துள்ளது. அந்த விசித்திரமான காட்சியை உறுதிசெய்ய சாரா தனது ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் லைட்டில் தனது மகனின் கண்களை இன்னும் நெருக்கமாக பார்த்துள்ளார்.
ஃபிளாஷ் லைட்டில் தான் பார்த்ததை கண்டு சாராவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், மொபைலில் அதனை பல புகைப்படங்கள் எடுத்துள்ளார். தனது மகனின் கண்களில் தென்படுவது என்ன என்பது குறித்து உடனடியாக இணையத்தில் தேடி உள்ளார். கொஞ்சம் நேரம் கழித்து அதே கண்களை புகைப்படம் எடுத்தபோது, அந்த பளபளப்பு காணவில்லை. ஒருவேளை இது லைட்டினால் ஏற்பட்ட மாயையோ என அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.
எனவே, அதுகுறித்து உறுதி செய்ய அடுத்த நாளே, அவரது மகனை அனைவிதமான வெளிச்சங்களிலும் ஒவ்வொரு அறையிலும் புகைப்படம் எடுத்துள்ளார். அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்த பளபளப்பு கண்களில் தெரிவது மீண்டும் உறுதியானது. இதுகுறித்து மீண்டும் இணையத்தில் தேடியுள்ளார். அப்போதுதான், அது புற்றுநோய் என அவருக்கு தெரியவந்தது. மேலும் இதனை உறுதிப்படுத்த மருத்துவரிடம் சென்றிருக்கிறார். மருத்துவரும் அது புற்றுநோய்தான் என்பதை உறுதிசெய்து, கூடுதல் சிகிச்சைக்காக மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கும்படி தெரிவித்துள்ளார்.
தாமஸின் கடினமான பயணம்
தாமஸிற்கு, retinoblastoma என்ற அரிய மற்றும் தீவிரமான கண் புற்றுநோய் ஆகும். சாரா அவரது மகன் குறித்து மிகவும் வேதனையடைந்தார். இருப்பினும், அப்போது தாமஸின் புற்றுநோய்க்கு எதிரான போர் தொடங்கியது. ஆறு முறை மிக மிக கடினமான கீமோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டார். அதாவது, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அந்த கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டார். செப்சிஸ் நோய் உட்பட சில பின்விளைவுகளுக்கு மத்தியில், தாமஸ் பொறுமையாக அந்த சிகிச்சையை மேற்கொண்டார். குறிப்பாக, கடந்தாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தனது இறுதி கீமோதெரபி சிகிச்சையை அவர் முடித்தார். கடந்தாண்டு மே மாதம் அவர் வெற்றிகரமாக சிகிச்சை ஒட்டுமொத்தமாக நிறைவுசெய்து புற்றுநோயில் இருந்து மீண்டார்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.