9.3 C
Munich
Monday, October 7, 2024

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்று நோய் பாதிப்பு.. பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்று நோய் பாதிப்பு.. பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

Last Updated on: 6th February 2024, 10:52 am

லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அந்த நாட்டின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சார்லஸ் முறைப்படி மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். 75- வயதான இங்கிலாந்து மன்னருக்கு கடந்த வாரம் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

enlarged புரோஸ்டேட் பாதிப்பு காரணமாக சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, புரோஸ்டேட் பிரச்சினைக்காக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது மேலும் பிரச்சினை கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டுள்ளது.


இதற்காக மன்னருக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை வழக்கம் போல் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

சார்லஸ்க்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு எந்த ஸ்டேஜில் உள்ளது என்பது குறித்து எந்த விவரத்தையும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை. அதே வேளையில், புரோஸ்டேட் கேன்சர் இல்லை என்றும் என்லார்ஜ்ட் புரோஸ்டேட்டிற்கான சிகிச்சையின் போது கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here