Last Updated on: 1st January 2024, 06:50 pm
2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் ஜப்பான் திக்குமுக்காடியுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டின் முதல் நாளை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜப்பானில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
இஷிகாவா, வாஜிமா, ஹோன்ஷீ உள்ளிட்ட இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு சுனாமி தாக்கியது.
அதுமட்டுமல்லாது ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ரிக்டர் அளவுகோலில் 6 க்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடகொரியா தென் கொரியா மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சாலைகள் விரிசல் விட்டு பிளந்து காணப்படுகிறது. ரயில் நிலையங்கள், வீடுகள், கடைகள் குலுங்கி சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.