Last Updated on: 25th December 2023, 08:54 pm
பெங்களூரைச் சேர்ந்தவல் 34 வயதான அல்ட்ரா மாரத்தான் வீரரான ஆகாஷ் நம்பியார. இவர் துபாய் தெருக்களில் வெறுங்காலுடன் 104 கிமீ தூரத்தை 17 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘பேர்ஃபுட் மல்லு’ என்று அழைக்கப்படும் நம்பியாரின் சாதனை வெறும் உடல் வலிமையை சோதிப்பதற்காக செய்யப்படவில்லை.
துபாயின் மிக உயரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவாவை இலக்காக வைத்து வெறுங்காலுடன் ஓடிய அவர் தனது இலக்கை நள்ளிரவில் அடைந்தார். சூடான மத்திய கிழக்கு நிலப்பரப்பைத் துணிச்சலாக வெறுங்காலுன் சென்று அசாதாரண மராத்தானை நிறைவு செய்துள்ளார். வெயில் சுட்டெரிக்கும் பகல் பொழுதை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட ஆகாஷ் நம்பியார், இரவுகளை கூட முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாமல் தனது விழிப்புணர்வை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.