Last Updated on: 14th December 2023, 07:48 pm
சிங்கப்பூரில் பரவிய புதிய கொரோனா கேரளாவில் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பரவல் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.