26.5 C
Munich
Saturday, September 7, 2024

மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா..! 

Must read

Last Updated on: 9th May 2024, 11:41 am

ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களை பாதிக்கும் வகையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா தேவைகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.மாணவர் விசாவிற்குத் தகுதிபெற சர்வதேச மாணவர்கள் குறைந்தபட்சம் AUD29,710($19,576) சேமிப்புக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

குறைந்தபட்ச சேமிப்பு தொகையின் வரம்பு உயர்த்தப்படுவது கடந்த ஏழு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.முன்பு AUD24,505($16,146)ஆக இருந்த குறைந்தபட்ச சேமிப்பு தொகை, தற்போது AUD29,710($19,576) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சரியாக $3,430 டாலர்கள், 2,86,439 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டு குடியேற்றத்தை பாதியாக குறைக்கும் முயற்சி

இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மாணவர் ஆட்சேர்ப்பில் நடைபெறும் மோசடிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பிரதம மந்திரி ஆண்டனி அல்பானீஸ் அரசாங்கம் மாணவர் விசாக்களின் செயல்முறையை கடினமாக்க பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

IELTS தேர்வுகளின் குறைந்தபட்ச மதிப்பெண்களும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டன.கடந்த அக்டோபரில், AUD21,041ஆக இருந்த குறைந்தபட்ச சேமிப்பு தொகை, AUD24,505 ஆக உயர்த்தப்பட்டது.ஆண்டு குடியேற்றத்தை பாதியாக குறைக்கும் முயற்சியில் மாணவர் விசாக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article