7 நாட்களில் 7 உலக அதிசயங்களையும் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் எகிப்தை சேர்ந்த மக்டி ஈசா!இவர் சுமார் 6 நாட்கள், 11 மணிநேரம், 52 நிமிடங்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
இதற்காக ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததாக இவர் தெரிவித்துள்ளார். இவர் தனது பயணம் முழுவதும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்