Last Updated on: 5th June 2023, 12:51 pm
எனது குட்டிக் குழந்தை, பெற்றோர் இருந்தாலும், அனாதை மாதிரி வாழ வேண்டிய நிலையில் தவிக்கிறாள். இரண்டு ஆண்டுகளாக அவளை விட்டு நாங்க பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதில் பெற்றோர்களுக்கே அதிக அக்கறை இருக்கும் நிலையில், அவளுக்கு தாயின் அரவணைப்புடன் யார் சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்?”
“மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, என்னிடம் இருந்து செவிலியர் அவளைப் பறித்துக்கொண்டார். அழுதுகொண்டே இருந்த அவளை செவிலியர் எடுத்துச் சென்றுவிட்டார்.”
“எனது மகளை மீட்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோதியை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.”
தாரா ஷா தனது இரண்டரை வயது மகள் அரிஹாவை தன்னுடனேயே வைத்து வளர்க்க ஆசைப்படுகிறார். ஜெர்மனி அரசாங்கம் அரிஹாவை கடந்த ஒன்றரை வருடங்களாக பெர்லினில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைத்துள்ளது.
அரிஹாவின் தாய் தாராவும், தந்தை பாவேஷ் ஷாவும் அவளைத் திரும்ப அழைத்து வருவதற்கு மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு வருடங்களாக அவளை மீட்கும் முயற்சிகள் எந்த வித பயனையும் அளிக்கவில்லை.அரிஹா ஏன் பெற்றோரிடமிருந்து பிரிந்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறாள்? உண்மையில் என்ன நடந்தது?
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது என்ன நடந்தது?
குறித்து தெளிவாகப் புரியவைக்க முயன்றார். ஆனால், அதற்குப் பின்னும் அரிஹாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்துவர முடியவில்லை.பின்னர் ஜெர்மன் அதிகாரிகள் பாவேஷ் மற்றும் தாரா மீது புகார் அளித்தனர்.
இந்த புகார் மீதான வழக்கில் அரசு வழக்கறிஞர் மூலம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.ஐந்து மாதங்களுக்குப் பிறகு அரிஹா எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் பாவேஷ் மற்றும் தாரா தம்பதியினர் நிம்மதியடைந்தனர். அதற்குள் ஒரு வயதாகியிருந்த அரிஹாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்துவிடலாம் என அவர்கள் நம்பிய நிலையில், அது இதுவரை நடக்கவில்லை.
பெற்றோராக ஒரு குழந்தையை வளர்க்க உங்களுக்கு தகுதியிருக்கிறதா?
ஜெர்மன் நாட்டுச் சட்டத்தின்படி, தாரா மற்றும் பாவேஷ் ஆகியோர், ‘பெற்றோர் திறன்’ அறிக்கையை அளித்தால் மட்டுமே அரிஹாவை அவர்களிடம் ஒப்படைக்கமுடியும்.குழந்தையைப் பராமரிக்க பெற்றோர்களுக்குத் தகுதியிருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்து ஒரு சான்றிதழாக மனநல மருத்துவரால் இந்த அறிக்கை வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழைப் பெற, பாவேஷும், தாராவும் ஓராண்டுக்கு மேற்கொள்ளவேண்டிய செயல்முறைகள் அனைத்தையும் அவர்கள் இப்போது முடித்துவிட்டனர்.”மனநல மருத்துவர் நிறைய தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டார். நீங்கள் எங்கே பிறந்தீர்கள், உங்கள் குடும்பத்தில் யார் எல்லாம் இருக்கின்றனர் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன,” என்கிறார் தாரா.”நீங்கள் எப்படிப்பட்ட சூழலில் வளர்ந்தீர்கள்? உங்களுக்கு எப்படி திருமணம் நடந்தது?””குழந்தை பிறக்கும் முன், அதை வீட்டில் நீங்களே வளர்ப்பது பற்றி யோசித்தீர்களா? இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
“மேலும், “ஜெர்மனியில் குழந்தைகள் சாப்பிடும் போது என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.”
பாவேஷ் – தாரா தம்பதியினர் தற்போது மாதம் இருமுறை அரிஹாவை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.அரிஹாவுடனான தனது சந்திப்பை நினைவுகூர்ந்த பாவேஷ், “நாங்கள் அவளை சந்திக்கும் போது, எங்கள் உறவு எப்போதும் போல் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன்.
முன்பிருந்ததைப் போலவே இருக்கும் அந்த உறவு இன்னும் கொஞ்சமும் மாறவில்லை,” என்றார்.”நாங்கள் அவளைச் சந்திக்கப் போகிறோம். அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை, ஆனால் நாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டை அவள் மிகவும் விரும்புகிறாள். குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பணியாற்றுபவர்கள் கூட அரிஹாவுக்கு இந்திய உணவுகள் தான் மிகவும் பிடித்திருக்கின்றன என்கின்றனர்.”
“அவள் உங்களைப் பிரிந்து தவித்து வருகிறாள். அவளைப் பார்க்க நாளை நீங்கள் வருவீர்கள் என்று கூறினாலே அவள் முகத்தில் ஒரு சந்தோஷம் படர்வதை நாங்கள் உணர்கிறோம் என குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பணியாற்றுபவர்கள் கூறுகின்றனர்.”
பெற்றோரின் திறன் அறிக்கையில், அரிஹா நீண்ட காலத்துக்குப் பெற்றோர்களைப் பிரிந்திருந்தாலும், அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதாகவும், பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டால் அவள் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தாரா ஷா கூறுகையில், “அவள் எல்லோரிடமும் எளிதில் நெருங்கிப் பழகுவதால் அவளுக்கு ‘அட்டாச்மென்ட் டிஸ்ஆர்டர்’ என்ற மனநலக் குறைபாடு இருப்பதாக மருத்துவர் சான்றளித்துள்ளார். “
“இந்தியக் கலாசாரப்படி நம் குழந்தைகள் ஆரம்பத்திலிருந்தே குடும்பம், உறவினர்களுடன் நெருங்கி வாழப் பழகிவிடுகின்றனர். இதை ஏன் ‘அட்டாச்மென்ட் டிஸ்ஆர்டர்’ என ஒரு மனநலக் குறைபாடாக அந்நாட்டு சட்டங்கள் கருதுகின்றன?” என்று அப்பாவியாகக் கேட்கிறார் தாரா ஷா.
பெற்றோர் திறன்’ சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு வருட செயல்முறையை முழுமையாக முடித்த பிறகும், பாவேஷ் – தாரா தம்பதியினர் அரிஹாவுக்கு பல விஷயங்களை முழுமையாகக் கற்றுத்தரவில்லை என அந்த சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு உணவு பரிமாற கற்றுக்கொடுக்க வேண்டும்.
அவர்களை எங்கும் விளையாட விடக்கூடாது என்று பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டன.இது தொடர்பான வழக்கில் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது.
இத்தீர்ப்புக்குப் பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் அவளை வைத்து, பெற்றோரில் யாராவது ஒருவர் அவளுக்கு இதையெல்லாம் கற்றுத்தரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கொஞ்சம் நிம்மதியளிக்கும் விதத்தில் உள்ளது. குறைந்தது பாவேஸ் அங்கு சென்று அவளுக்கு இது போன்ற செயல்களைக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதே அந்த நிம்மதிக்குக் காரணம்.
இந்திய அரசுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அரிஹாவுக்குத் தேவையான பழக்கவழக்கங்களைக் கற்றுத்தர, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் அவளுடன் பெற்றோரில் ஒருவர் தங்க முடியும் என்ற நிலையில், அவளை இந்தியாவுக்கு அழைத்து வந்து அதே போன்ற குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவிடுமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு பாவேஷ் – தாரா தம்பதியினர் பிபிசி மூலம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் உதவி கோரியுள்ளனர். அரிஹா விரைவில் பெற்றோருடன் இணைந்து வாழ வழிகள் பிறக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.