ஹோட்டலில் பில் செலுத்தாமல் இருக்க ஹார்ட் அட்டாக் நாடகம்!அதுவும் 20+ முறை! கடைசியில் சிக்கியது எப்படி

ஹோட்டலில் பில் செலுத்தாமல் இருக்க ஹார்ட் அட்டாக் நாடகம்!அதுவும் 20+ முறை! கடைசியில் சிக்கியது எப்படி

Last Updated on: 20th October 2023, 01:26 pm

பார்சிலோனா: நட்சத்திர விடுதியில் உணவைச் சாப்பிட்டுவிட்டு திடீரென மாரடைப்பு என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வெளிநாடுகளில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல வினோதமான சம்பவங்கள் நடக்கும். அதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் தான் இப்போது ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது.

ஸ்பெயினின் பிளாங்கா மாகாணத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கே இருக்கும் புகழ்பெற்ற விலையுயர்ந்த கடைகளுக்குச் செல்லும் இவர், அங்கே இரவு உணவைச் சாப்பிடுவாராம். வகை வகையாக எல்லா விலையுயர்ந்த உணவுகளையும் ஆர்டர் செய்து ஒரு பிடி பிடித்துவிடுவார். கடைசியில் பில்லை கொடுத்தால்.. திடீரென மாரடைப்பு வந்தது போல ஒரு ஆக்டிங் விடுவராம். இதன் மூலம் பில் செலுத்தாமல் அவர் எஸ்கேப் ஆகிவிடுவாராம்.

ஹார்ட் அட்டாக் நாடகம்: இதையே அவர் வாடிக்கையான ஒன்றாக வைத்துள்ளார். இவர் எதோ ஓரிரு முறை மட்டும் இப்படி ஏமாற்றியது இல்லை. பல முறை இதை டிரிக்கை பயன்படுத்திச் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் ஹார்ட் அட்டாக் நாடகம் போட்டுள்ளார். இப்படியே மொத்தம் அவர் 20க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை ஏமாற்றியுள்ளார். இதனால் இவரிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள உணவகங்களின் வாட்ஸ்அப் குழுக்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டே இருந்ததாம்.

50 வயது மதிக்கத்தக்க இந்த நபரைத் தான் இப்போது போலீசார் கைது செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வழக்கம் போல அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அவர் சென்றுள்ளார். வகை வகையாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அவருக்கு 37 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3000 ஆயிரம் ரூபாய் பில்லாக வந்துள்ளது. பில்லை அவரிடம் கொடுத்துவிட்டு ஊழியர்கள் மற்ற டேபிள்களை கவனிக்கச் சென்றுள்ளனர்.

ஹோட்டல் நிர்வாகம்: அப்போது நைசாக அவர் அங்கிருந்து கிளம்பப் பார்த்துள்ளார். இருப்பினும், அவர் வெளியேறுவதைப் பார்த்த ஊழியர்கள் பில் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது அந்த நபர் ஹோட்டல் ரூமில் பணம் இருப்பதாகவும் அதை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவர் குறித்த எச்சரிக்கை ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்திருந்ததால். அவரை அங்கிருந்து கிளம்ப ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அப்போது தான் அவருக்குள் இருந்த அந்த நடிகன் மீண்டும் வெளியே வந்துள்ளான்.உடனே மாரடைப்பு ஏற்பட்டதை போல மயங்கி விழுந்து நடித்துள்ளார். இருப்பினும், அடுத்து என்ன என்பதைப் போலப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் அவர் நடித்துள்ளது தெரிய வந்ததது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

எல்லாம் நடிப்பு: இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் கூறுகையில், “அவர் அநியாயத்திற்கு ஒரு ஆக்டிங் போட்டார்.. மயங்கி விழுவது போல நடித்தார். தரையில் சரிந்தார்.. இருப்பினும், அவர் இதுபோல ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்ததால்.. ஏற்கனவே மற்ற உணவகங்கள் இது குறித்து எங்களுக்கு அலர்ட் செய்திருந்தார்கள். இதனால் இந்த முறை நாங்கள் ஏமாறவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

டிப்டாப் உடை, போலோ ஷர்ட் என எப்போதும் பக்காவாகவே இந்த நபர் உணவகத்திற்கு வருவாராம். இதன் காரணமாகவே பல உணவகங்களும் இவரை நம்பி விடுவார்களாம். இந்த முறையும் அதேபோல ஆக்டிங்கை போட்ட அந்த நபர், மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆம்புலன்சுக்கு கால் செய்யும்படி கூறியிருக்கிறார்.

இருப்பினும், அவரை பற்றித் தெரிந்து இருந்ததால்.. ஆம்புலன்சுக்கு கால் செய்யாமல் ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஏற்கனவே பல உணவகங்கள் அவர் மீது புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Comment