வெறும் 50 ரூபாய் சம்பளம்… உலகின் மிக ஏழ்மையான நாடு

உலகின் பல நாடுகள் வறுமையுடன் போராடி வரும் நிலையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி அடையாளம் காணப்பட்டுள்ளது.

மிக கடுமையான வறுமையில்;

வறுமையின் வலியைப் புரிந்து கொள்ள, புருண்டியின் நிலைமையை கவனித்தாலே போதும் என்கிறார்கள் ஆர்வலர்கள். உலகின் ஏழை நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. மட்டுமின்றி வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இங்குள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு இந்த புருண்டி ஒரு காலத்தில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டன.இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, ​​பொருளாதார நிலை நன்றாக இருந்தது, ஆனால் 1996ம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. புருண்டியில் 1996 முதல் 2005 வரை நடந்த பெரும் இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது.

அதோடு அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது. மெல்ல மெல்ல இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது. புருண்டியைத் தவிர, மடகாஸ்கர், சோமாலியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் போராடி வருகின்றன.

ஆண்டு வருமானம் 180 டொலர்கள்:

புருண்டி மக்களின் ஆண்டு வருமானம் 180 டொலர்கள், அதாவது ஆண்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் தான். இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல், நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது.

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள பல ஏழை நாடுகளின் முன்னேறத்திற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்த போதிலும், புருண்டி உட்பட உலகின் பல நாடுகளில் நிலைமை முன்னேற்றமடையவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times