8.9 C
Munich
Friday, September 13, 2024

வாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க

வாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க

Last Updated on: 13th May 2023, 06:22 am

வாஷிங்டன்: கடந்த சில வாரங்களாகவே பலருக்கும் வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருவதாக சொல்லி வருவதை காண முடிகிறது. இப்படி அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

உலகம் முழுவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப். குறுஞ்செய்தி அனுப்புவது முதல் இமேஜ்கள், வீடியோக்கள், கோப்புகள் என அனைத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப முடியும் என்பதால் வாட்ஸ் அப் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வாட்ஸ் அப்பில் குருப் கிரியேட் செய்து தங்கள் நட்பு வட்டங்களுக்குள் அரட்டை அடிப்பதில் தொடங்கி அலுவலக பயன்பாடு வரைக்கும் வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது வாய்ஸ் கால், வீடியோ காலும் பேச முடியும். இதனால், பலரும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மட்டும் அனுப்பிய காலம் போய் தற்போது ஆடியோ, வீடியோ காலிலும் பேசி வருவதை காண முடிகிறது

வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட சூழலிலும் வாட்ஸ் மூலமாக சில மோசடி செயல்களையும் சிலர் அரங்கேற்றி வருகின்றனர். வாட்ஸ் அப்பை மையமாக வைத்து சைபைர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பலருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து திடீர் திடீரென அழைப்புகள் வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து இருந்தனர்..

குறிப்பாக எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிள் இருந்தும் பலருக்கும் கால்கள் வந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே வந்து விட்டு தானாகவே கட் ஆகிவிடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு இருந்தனர். பலருக்கு ஏன் இப்படி மிஸ்டு கால் வருகிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

*சிலரோ அதே எண்ணிற்கு கால் செய்ய முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சம்பந்தமே இல்லாத அழைப்புகள் வந்தால் உடனடியாக செய்ய வேண்டிய 5 விஷயங்களை பார்க்கலாம்:-

*அழைப்பு வந்தால் எடுக்கக் கூடாது. சம்பந்தமே இன்றி வரும் இதுபோன்ற வெளிநாட்டு அழைப்புகள் அந்தால் தயவு செய்து அதற்கு பதிலளிக்க வேண்டாம். இந்த கால்களுக்கு பதிலளித்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது.

*பரிசுகள் விழுந்து இருப்பதாகவோ.. லாட்டரியில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்ற தகவலுடன் வரும் மெசேஜ்களை கிளிக் செய்ய வேண்டாம். அதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் உடனடியாக வாட்ஸ் அப்பிற்கு ரிபோர்ட் செய்யவும்

*ஒரே எண்ணில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தால் உடனடியாக அதை பிளாக் செய்ய வேண்டும். கால் லாக்கில் எண்களை செலக்ட் செய்து பிளாக் செய்து விட முடியும்; அதேபோல், உங்களுக்கு வரும் அழைப்புகள் மோசடியானது என்று நீங்கள் கருதினால் உடனடியாக அந்த எண்ணை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

*அதேபோல், வாட்ஸ் அப்பில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சமான two-factor authentication-வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம் உங்கள் வாட்ஸ் அப்பிற்குள் செல்ல பாஸ்வேர்டுடன் வெரிபிகேஷன் கோடும் கேட்கும். இதனால் வேறும் யாரும் உங்கள் வாட்ஸ் அப்பை முறைகேடாக பயன்படுத்த முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here