8.9 C
Munich
Friday, September 13, 2024

வலிமைவாய்ந்த டொக்சூரி சூறாவளி – எதிர்கொள்ளத் தயாராகும் சீனா

வலிமைவாய்ந்த டொக்சூரி சூறாவளி – எதிர்கொள்ளத் தயாராகும் சீனா

Last Updated on: 27th July 2023, 05:58 pm

சீனாவின் பெருநிலப் பகுதி டொக்சூரி (Doksuri) சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகிறது.அதனை மாபெரும் சூறாவளி என்று சீனா கூறுகிறது.

நாளை (28 ஜூலை) சூறாவளி வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதனால் பெயச்சிங் எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது.

நாளை குவாங்டொங்கிற்கும் (Guangdong) பூஜியானுக்கும் (Fujian) இடையில் அது கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் அந்த வட்டாரத்தை உலுக்கும் 2ஆவது சூறாவளி அது.

வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக Doksuri-சூறாவளி பிலிப்பீன்ஸின்வட பகுதியில் நேற்று மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.புயல்காற்றுக்கு இருவர் பலியாயினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here