Last Updated on: 10th October 2023, 05:51 pm
துபாய்: தங்கள் நாட்டிற்கு வந்துவிடாதா என்று உலக மக்களே எதிர்பார்த்து காத்திருக்கும் லுலு மால், தற்போது துபாயில் ராயல் எண்ட்ரியை கொடுத்திருக்கிறது. இதுவரை பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் லுலு மால்களிலேயே, இதுதான் பிரம்மாண்டத்தின் உச்சமாக களம் இறங்கி இருக்கிறது.
லுலு என்ற பெருங்கடல்!
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்தான் லுலு (Lulu). உலக நாடுகள் பலவற்றிலும் தங்களின் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளை இந்நிறுவனம் அமைத்திருக்கிறது. அதுதான் நம்மூரிலேயே மூலைக்கு மூலை ஹைப்பர் மார்க்கெட்டுகள் இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த ஹைப்பர் மார்கெட்டுகள் லுலு என்ற கடலின் முன்பு சிறு குட்டை என்றால் அதன் பிரம்மாண்டத்தை எண்ணிக் கொள்ளுங்கள்.
சாதாரண காய்கறி முதல் ‘ஹை எண்ட்’ கம்ப்யூட்டர்கள் வரையிலும், ஆடைகள் முதல் இம்போர்ட் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளில் நம்மால் வாங்க முடியும். இந்தியாவை பொறுத்தவரை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் லுலு தங்கள் ஹைப்பர் மார்க்கெட்டுகளை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் கோவையில் அமைந்துள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட், சென்னையிலும் விரைவில் அமையவுள்ளது.
இந்நிலையில், தற்போது ஐக்கிய அரபு நாட்டின் உலக புகழ்பெற்ற நகரமான துபாய்க்கு ராயலாக நுழைந்திருக்கிறது லுலு ஹைப்பர் மார்க்கெட். அதுவும் உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மாலான துபாய் மாலில் (Dubai Mall) லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைந்திருப்பது வேற லெவலில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டத்தில் ஒரு பிரம்மாண்டம் அமைந்தால் எப்படி இருக்குமோ, அப்படிதான் இருக்கிறது துபாய் லுலு மார்க்கெட்டை பார்க்கும் பொழுது.
துபாய் மாலில் அமைந்திருக்கும் இந்த லூலு ஹைப்பர் மார்க்கெட்டை, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சர் தானி பின் அகமது அல் சயாதி திறந்து வைத்தார். லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசப் அலி இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசினார். இந்த ஹைப்பர் மார்க்கெட் லுலுவின் 258-வது ஹைப்பர் மார்க்கெட் ஆகும். மேலும், ஐக்கிய அரபு அமீரக்தில் அமையும் 104-வது ஹைப்பர் மார்க்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா அருகிலேயே லுலு மார்க்கெட் அமைந்திருப்பதால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் இங்கு வருகை தருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.