Last Updated on: 16th June 2023, 09:03 pm
பூமியின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சியளித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை
தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, சூன் மாதம் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சராசரி வெப்பம் உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கைஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு பிரிவு இதனை கூறியுள்ளது. மேலும், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது வெப்பம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் அடிக்கடி நிகழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எல் நினோ நிகழ்வு ஏற்பட்டுள்ள நிலையில் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிகழ்வின்போது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மோசமான ஆபத்துஇந்நிலையில், C3S அமைப்பின் துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் கூறுகையில், ‘இதுவரை இல்லாத வகையில் உலகம் அதன் வெப்பமான சூன் முதல் வாரத்தில் பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, வெப்பம் 0.1 டிகிரி செல்ஸியஸ் குறைந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை சூன் வாரம் இந்த அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது இல்லை.
இந்தாண்டு சூன் தொடக்கத்தில் உலகளவில் மேற்பரப்பு காற்றின் வெப்பம் என்பது இதுவரை பதிவனத்தில் கணிசமாக அதிகமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.பூமியின் வெப்பநிலை ஒவ்வொரு டிகிரி அதிகரித்தாலும் கூட அது பருவநிலை மாற்றத்தில் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.