Last Updated on: 12th September 2023, 12:18 pm
திரிபோலி: லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரிளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளை இந்த கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால் டெர்னா நகரில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம்: இந்த வெள்ளத்தில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.