சவுதிஅரேபியாவில் செயல்படும் ஸ்மார்ட் டாக்ஸிகளின் ஓட்டுனர்கள், ஒப்புக்கொண்ட பயணங்களை ரத்து செய்தால் அவர்களுக்கு 4000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்மார்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் பொது போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியை பெற்றிருந்தால், அவர்கள் சவுதியின் மற்ற நகரங்களிலும் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.