9.1 C
Munich
Thursday, September 12, 2024

டயட்’.. எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாங்க பாருங்க! கணவர் சொன்ன ஒற்றை வார்த்தை! சிக்கலில் பெண்!

Must read

Last Updated on: 12th June 2023, 09:12 am

ரஷ்யாவில் கணவர் கூறிய ஒற்றை வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தற்போதைய உணவு பழக்கத்தில் நமது உடல் எடை என்பது திடீரென அதிகரித்து விடும். தொப்பை வளர்வது மற்றும் கன்னங்கள் தடிப்பது உள்ளிட்டவை தான் உடல் எடை அதிகரிப்பின் அறிகுறியாக உள்ளன. சிலர் உடல் எடையை கவனத்தில் கொள்வது இல்லை என்ற போதிலும், பலரும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏனென்றால் உடல் எடை அதிகரிப்பு என்பது நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதோடு, இல்லறம் சார்ந்த விஷயங்களிலும் சிக்கலை ஏற்படுத்தலாம். பல இடங்களில் உடல் எடையை காரணம் காட்டி கணவரை விட்டு மனைவியும், மனைவியை விட்டு கணவரும் பிரிந்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் தான் ரஷ்யாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த பெண் யானா போப்ரோவா. திருமணம் ஆனவர். இவர் 5.2 அடி உயரம் கொண்டவர். இந்நிலையில் தான் இவரது கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறிவந்துள்ளார். மேலும் கணவர் அவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் யானா போப்ரோவா தனது எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தொடங்கினார். தொடக்கத்தில் தான் விருப்பப்பட்ட உணவுகளை நன்றாக ருசித்து வந்த யானா போப்ரோவா ‛டயட்’ என்ற பெயரில் பிடித்த உணவுகளை புறம்தள்ளினார். இருப்பினும் கூட அவரது கன்னம் குண்டாக இருப்பதாகவே கணவர் கூறி வந்துள்ளார். இதனால் தான் யானா போப்ரோவா தீவிர டயட் உணவை கையில் எடுத்துள்ளார்.

இதற்கிடையே தான் பலமுறை அவர் ‛டயட்’ உணவை கூட சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். இது மிகப்பெரிய சிக்கலை அவருக்கு ஏற்படுத்தி உள்ளது. அதாவது நீண்டநாட்களாக அவர் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் பட்டினி கிடந்ததன் விளைவு என்பது அவரை எலும்பும், தோலுமாக மாற்றி உள்ளது.

இந்நிலையில் தான் என்டிவியின் டாக் ஷோ நிகழ்ச்சியில் யானா போப்ரோவா பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யானா போப்ரோவா ஆள் அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ளார்.

எலும்பும், தோலுமாக அவர் காட்சியளித்தார்.இந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், ‛‛எனது கன்னம் குண்டாக இருப்பதாக தொடர்ந்து கணவர் கூறி வந்தார். இது என் மனதில் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் டயட் என்ற பெயரில் பட்டினி கிடந்து உடல் எடையை குறைத்தேன்.

மேலும் நான் எடை குறைப்பில் ஈடுபடுவது தெரிந்தும் கூட என் கணவர் என்னை தடுக்கவே இல்லை. இது மிகவும் வலியை தருகிறது. அதோடு வெளியுலக தொடர்பில் இருந்து என்னை முற்றிலுமாக தனிமைப்படுத்தினார். இருப்பினும் கூட என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது இந்த நிலைமைக்கு நான் எனது கணவர் மற்றும் பெற்றோரை குற்றம் சொல்ல மாட்டேன். இது என்னுடைய தவறு தான்” என கண்கலங்கினார்.

இதையடுத்து யானா போப்ரோவா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி ஊட்டசத்து நிபுணர் மெரினா மகிஷா கூறுகையில், ‛‛அதிகபடியான பட்டினியால் அவரது உடல் தன்னைத்தானே சாப்பிட்டுள்ளது.

எலும்பு, தோல்களை உடல் தின்றுவிட்டது. தற்போது மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை” என்றார். இந்நிலையில் தான் அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைத்தபோது யானா போப்ரோவா மிக குறைந்த அளவில் டீ, தண்ணீர், சாக்லேட், சீஸ், சில பிஸ்கட்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அரை டம்ளர் அளவுக்கு ப்ரோத் பருகியுள்ளார். இதன்மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காத நிலையில் அவர் எலும்பும் தோலுமாக மாறி உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தான் யானா போப்ரோவா எடை குறைப்புக்கு முன்பு இருந்த போட்டோவும், எடை குறைப்புக்கு பிறகு டாக் ஷோவில் பங்கேற்றபோது எடுத்த போட்டோவும் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. ஒரு போட்டோவில் ஸ்டைலாக இருக்கும் யானா போப்ரோவா இன்னொரு போட்டோவில் எலும்பும், தோலுமாக இருக்கிறார். இந்த படத்தை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article