16.9 C
Munich
Tuesday, September 10, 2024

ஜப்பானில் 5 லட்சம் பேருக்கு வேலை இருக்கு… இந்திய இளைஞர்களுக்கு கிடைச்ச சூப்பர் வாய்ப்பு!

Must read

Last Updated on: 13th September 2023, 02:32 pm

ஜப்பான் பொருளாதாரம்

மோட்டார் வாகனங்கள், இரும்பு, உயர் தொழில்நுட்ப சரக்குகள் போன்றவற்றில் உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்ட நாடுகளில் முன்னணியில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். வழக்கமாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தான் இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் லட்சக்கணக்கான தமிழர்கள்.

திறன் வாய்ந்த தொழிலாளர்கள்

இப்படியான வாய்ப்பு தற்போது ஜப்பானிலும் உருவாகியுள்ளது. அதுவும் ஐடி துறை, மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் அதிகப்படியான வேலைகள் காத்திருப்பதாக தெரிகிறது. இதுதவிர Skilled Workers எனப்படும் அடிப்படையான சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பெருமளவில் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கான வேலை என்பது விவசாயம், சுற்றுலா, ஓட்டல்கள், உணவகங்கள், கட்டுமானம், வயதானவர்களை பார்த்து கொள்ளுதல் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன.

பிறப்பு விகிதம் குறைவு

ஜப்பானில் திடீரென இப்படி ஒரு மெகா வாய்ப்பு எப்படி உருவானது என்ற கேள்வி எழலாம். இதற்கு முக்கியமான காரணம் அந்நாட்டின் மக்கள்தொகை சரிவை சந்தித்து வருவது தான். தற்போது இறப்பு விகிதம் அதிகமாகவும், பிறப்பு விகிதம் குறைவாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக இந்திய அரசுடன் இணைந்து ஜப்பான் அரசு செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் 5 லட்சம் திறன் வாய்ந்த தொழிலாளர்களை அனுப்புங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

குடியுரிமை வாய்ப்பு

உரிய ஆவணங்கள், போதிய படிப்பறிவு, சரியான திறன்கள், ஜப்பான் நாட்டை பற்றிய அடிப்படையான விஷயங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு வருவோருக்கு நீண்ட கால அடிப்படையில் வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம். அதுமட்டுமின்றி அந்நாட்டு குடியுரிமை வழங்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனக் கூறுகின்றனர். ஜப்பானில் படித்து கொண்டே வேலை செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

கொட்டும் சம்பளம்

இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜப்பான் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர், கல்வி விசாவில் சென்று படித்து கொண்டே பகுதி நேர வேலை செய்பவர்கள் கூட 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள். முழு நேரமாக வேலை செய்தால் குறைந்தது 1.25 லட்ச ரூபாய் முதல் சம்பளம் வாங்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இதுதவிர ஓவர் டைம் வேலை செய்தால் அதற்கென்று தனியாக சம்பளம் கிடைக்கும் என்றார். இதெல்லாம் இந்திய இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article