சவுதி அரேபியாவின் மெகா திட்டம்: 200 நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்து சேவை.. எவ்ளோ செலவு தெரியுமா?

சவுதி அரேபியாவின் மெகா திட்டம்: 200 நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்து சேவை.. எவ்ளோ செலவு தெரியுமா?

Last Updated on: 18th October 2023, 09:25 am

சவுதி அரேபியாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தொழில், வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக தங்கியுள்ளனர். தங்களின் நாட்டிற்கு மக்களை கவரும் வகையிலும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மெகா திட்டம்விசா நடை முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, சலுகைகளை அறிவித்து வரும் சவுதி அரேபிய அரசு, உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சவூதி அரேபியா 200 நகரங்கள் மற்றும் காணங்களை இணைக்கும் ஒரு மெகா இன்டர்சிட்டி பேருந்து போக்குவரத்து சேவை திட்டத்தை தொடங்கியுள்ளது.

60 லட்சம் பயணிகள்

இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகள் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது. இந்த மாஸ் திட்டத்தை சவுதி அரேபிய போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் சேவைகள் அமைச்சர் சலே பின் நாசர் அல் ஜாசர் தொடங்கி வைத்தார். சவுதி அரேபியாவில் தற்போது, SAPTCO நிறுவனம் மட்டுமே பேருந்து வழித்தட சேவைகளை வழங்கி வருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

இந்நிலையில் முதல் முறையாக போக்குவரத்து துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மூன்று சர்வதேச நிறுவனங்களின் ஒப்பந்தத்துடன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய அதிநவீன பேருந்துகள் 200 நகரங்கள் மற்றும் மாகாணங்களை இணைக்க பயன்படுத்தப்படுகின்றன. 76 வழித்தடங்களில் பொதுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு

மேலும் இந்த திட்டத்தின் மூலம் 35000க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 853 மில்லியன் டாலர் செலவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இன்டர்சிட்டி போக்குவரத்து சேவையின் மூலம் சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 பில்லியன் சவுதி ரியாலாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

முக்கிய நோக்கம்பயனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்தவும், தனியார் துறை கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை 1 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்துவதும், அதே ஆண்டில் போக்குவரத்தில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வை 25 சதவீதமாகக் குறைப்பதும் இந்த போக்குவரத்து சேவையின் முக்கிய நோக்கம் என்றும் சவுதி அரேபிய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment