சபிக்கப்பட்டவர் என்றார்கள்… 70 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாரான பெண்: அதிசயம் என்ற மருத்துவர்

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 70 வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

70 வயதில் ஆப்பிரிக்காவின் வயதான பெண்

வயதான காலத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானது அதிசயம் என்றே மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 70 வயதான சஃபினா நமுக்வாயா புதன்கிழமை இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குறித்த மருத்துவமனையிலேயே அவர் கருவுறுதலுக்கான சிகிச்சையும் முன்னெடுத்துள்ளார். 70 வயதில் ஆப்பிரிக்காவின் வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளது அசாதாரண சாதனை என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாயும் சேயும் மருத்துவமனை கவனிப்பில் இருப்பதாகவும் ஆனால் மூவரும் நலமாக உள்ளனர் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கம்பாலாவில் இருந்து 120 கி.மீ தொலைவில் Masaka என்ற புறநகர் பகுதியில் வசித்து வருகிறார் சஃபினா நமுக்வாயா.

திருமணம் முடித்து பல ஆண்டுகளாக மகப்பேறு இன்றி, சபிக்கப்பட்ட பெண் என கிராம மக்களால் தூற்றப்பட்டதாக கூறும் அவர், 2020ல் தமக்கு முதல் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.இரண்டாவது கணவர்

தமது முதல் கணவர் 1992ல் இறந்ததாகவும், அதுவரையில் தமக்கு பிள்ளைகள் இல்லை என்றும் கூறும் சஃபினா நமுக்வாயா, 1996ல் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கருவுறுதல் சிகிச்சை பின்னரே, இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக கூறும் அவர், தாம் மகப்பேறுக்கு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இதுவரை தமது இரண்டாவது கணவர் வந்து பார்க்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததால், குடும்பத்திற்கு என பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இல்லை என கருதுவதாக சஃபினா நமுக்வாயா குறிப்பிட்டுள்ளார்.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times