வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், பெட்ரோலிய வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. உலகிலேயே பண மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு என்றால் அது குவைத் தான். இதற்கு அடிப்படையான காரணம் எண்ணெய் வளம். தேசிய வருவாயை எடுத்து கொண்டால் சர்வதேச அளவில் 5வது இடத்திலும், ஜிடிபி மதிப்பில் எடுத்து கொண்டால் 12வது இடத்திலும் இருக்கிறது.
கொழிக்கும் எண்ணெய் வளம்ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் வளத்தை மேம்படுத்தவும், இதுதொடர்பாக வர்த்தகத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 3.5 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யும் அளவிற்கு மேம்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வரும் 2030 ஆண்டு என இலக்கு நிர்ணயம் செய்து குவைத் அரசு செயல்பட்டு வருகிறது.
குவைத் அரசின் திட்டம்மேலும் எரிவாயு உற்பத்தியை அதிகப்படுத்தி உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்து, இறக்குமதியை பெரிதும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக குவைத் அரசு முன்னெடுத்துள்ள திட்டங்களுக்கு 1.7 பில்லியன் குவைத் தினார்கள் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
இது இந்திய மதிப்பில் எடுத்து கொண்டால் 4.65 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் ஹைட்ரோ கார்பன் துறையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவுள்ளனர். இதற்கான வேலைகளில் குவைத் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
குவைத் எண்ணெய் நிறுவனம்
இந்த நிறுவனம் தான் அந்நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் தலைமையகம் அல் அகமதி நகரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1934ஆம் ஆண்டு முதல் திறம்பட செயல்பட்டு குவைத் நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை மேம்படுத்த உறுதுணையாக இருந்து வருகிறது.
மூன்று வகையான எண்ணெய்கள்
குவைத் ஆயில் நிறுவனம் மூன்று விதமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறது. அவை, குவைதி எக்ஸ்போர்டு க்ரூடு, லைட் க்ரூடு, ஹெவி க்ரூடு ஆகியவை ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் சர்வதேச அளவில் தனித்தனி விலை நிர்ணயம் செய்யப்படுவதும், பெரிய அளவில் மவுசும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.