கனடாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 2 இந்திய பயிற்சி விமானிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கனடாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 இந்தியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்வாக் நகருக்கு அருகே உள்ள விமான நிலைய பகுதியில் இரட்டை இன்ஜின் கொண்ட சிறிய விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு போலீஸார் நேற்று தெரிவித்தனர். இதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். இதில் அபய் காத்ரு (25) மற்றும் யாஷ் விஜய் ராமுகடே (25) ஆகிய 2 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

கனடாவின் லாங்லே நகரில் இயங்கி வரும் ஸ்கை குவெஸ்ட் ஏவியேஷன் நிறுவனம் விமானி பயிற்சி வழங்கி வருகிறது. இதில்தான் இருவரும் பயிற்சி பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times