Last Updated on: 15th November 2023, 03:17 pm
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்கும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற வசதியை ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள்நாட்டு எல்லைகளை மக்கள் சுதந்திரமாக பயன்படுத்தும் வகையில் ஐரோப்பிய நாடுகள் ஷெங்கன் பகுதியை அறிவித்துள்ளன.
ஷெங்கன் பகுதி நாடுகள்
அதன்படி ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, குரோஷியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, நார்வே, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 27 நாடுகளை சேர்ந்த மக்கள் அந்த நாடுகளுக்குள் பயணிக்க விசா தேவையில்லை.
வளைகுடாவின் 6 நாடுகள்
அதேபோன்ற முறையை வளைகுடா நாடுகளும் செயல்படுத்த உள்ளது. அதன்ப சுற்றுலாப் பயணிகள் GCC நாடுகள் முழுவதும் ஒரே ஒரு சுற்றுலா விசாவில் பயணிக்க முடியும். பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளுக்கு இடையே பயணிகள் எந்த சிரமமும் இன்றி எளிதாக செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஒருங்கிணைந்த சுற்றுலா விசா
இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவிற்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஒப்புதல் அளித்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் 40வது உள்துறை அமைச்சர்களின் கூட்டம் ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்றது. அப்போது GCC அமர்வின் தலைவர் சயீத் ஹமூத் பின் பைசல் அல் புசைடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். GCC நாடுகள் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா முறையை ஒருமனதாக அங்கீகரித்துள்ளன.
எப்போது நடைமுறைக்கு வரும்?
ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த விசா முறை 2024-25ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த விசா முறையின் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கல்வி,வேலை, தொழில், சுற்றுலா என சென்று வரும் நிலையில் அவர்களுக்கு இந்த ஒருங்கிணைந்த விசா முறை வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Your article helped me a lot, is there any more related content? Thanks!