ஒரு மாசம் தான் டைம்! இந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா பாருங்க

ஒரு மாசம் தான் டைம்! இந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா பாருங்க

Last Updated on: 25th September 2023, 08:58 pm

இன்னும் ஒரே மாதத்தில் குறிப்பிட்ட அனைத்து மொபைல்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்ற ஷாக் அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் உங்கள் மொபைல் இருக்கா எனப் பாருங்கள்.

இந்த காலத்தில் எல்லாமே முக்கிய தகவல் பரிமாற்றம் எல்லாமே வாட்ஸ்அப் வழியாகவே நடக்கிறது. கல்லூரிகள், வேலை செய்யும் நிறுவனங்கள் என அனைத்திலும் முக்கிய கம்யூனிக்கேஷன் வாட்ஸ்அப் வழியாகவே நடக்கிறது.

இணைய வசதி மட்டும் இருந்தால் போதும் எளிதாக மெசேஜ் அனுப்பலாம், பயன்படுத்தக் கட்டணம், வாட்ஸ்அப் க்ரூப், பிராட்கேஸ்ட் எனப் பல வசதிகள் கொட்டி கிடைப்பதால் வாட்ஸ்அப் செயலிலையேய பலரும் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்அப்: பேஸ்புக்கின் இணை நிறுவனமான வாட்ஸ்அப் தொடர்ச்சியாகப் பயனர் அனுபவம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அப்டேட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இதற்காக ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் வெப் வாட்ஸ்அப்களில் ஒவ்வொரு மாதமும் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி புது அப்டேட்களை வழங்குவது தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.இப்படி அப்டேட் தரும் போதுஸ பழைய அல்லது காலாவதியான மொபைல்களுக்கான சப்போர்ட்களையும் அது நீக்கி வருகிறது. பழைய சாப்ட்வேர்களை கொண்டிருக்கும் அந்த சாதனங்களில் உரிய அப்டேட் இருக்காது என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே குறிப்பிட்ட மொபைல்களில் வரும் அக். 24 முதல் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை செய்யாது: அதன்படி ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு முந்தைய சாப்ட்வேரில் இயங்கும் அனைத்து மொபைல்களிலும் வரும் அக். 24 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மொபைல் மாடல்களுக்கு சப்போர்ட்டை நிறுத்தும் முன்பு பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வோம். எதன் சாப்ட்வேர் பழமையானது. எதைக் குறைந்த நபர்கள் பயன்படுத்துகின்றனர் ஆகியவற்றை ஆய்வு செய்தே இது குறித்து முடிவு செய்வோம். மேலும், இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மாடல் மொபைல்கள்: அதன்படி வகும் அக். 24 முதல் நெக்சஸ் 7, சாம்சங் கேலக்ஸி 2, ஹெச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா இசட், LG Optimus G Pro, சாம்சங் கேலக்ஸி S2, சாம்சங் கேலக்ஸி நெக்சஸ், ஹெச்டிசி சென்சேஷன், Motorola Droid Razr, சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10.1, ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர், ஏசர் ஐகோனியா டேப் A5003, சாம்சங் கேலக்ஸி எஸ், ஹெச்டிசி டிசையர் HD, LG Optimus 2X, சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க்3 ஆகிய மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

இவை மட்டுமின்றி ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு முந்தைய சாப்ட்வேரில் இயங்கும் அனைத்து மொபைல்களிலும் வாட்எஸ்அப் இயங்காது. என்னடா இத்தனை மொபைலா என ஷாக் ஆக வேண்டாம். ஏனென்றால் இவை எல்லாம் பழைய மாடல்கள். பெரும்பாலான மக்களிடம் இந்த மொபைல் இருக்காது. இருப்பினும், இந்த ஸிஸ்டில் இருந்த மொபைலை நீங்கள் இன்னும் பயன்படுத்தினால், வாட்ஸ்அப்பை உங்களால் அடுத்த மாதத்தில் இருந்து பயன்படுத்த முடியாது. தொடர்ந்து நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த மொபைலை அப்கிரேட் செய்ய வேண்டும்.

செக் செய்வது எப்படி: உங்கள் மொபைல் எந்த ஆண்டிராய்டு பதிப்பில் இயங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். அதை ஈஸியாக கண்டுபிடிக்கலாம். உங்கள் மொபைலில் Settings > About phone > Software information சென்று மொபைல் வேர்ஷனை பார்க்க முடியும். இந்த வகை மொபைல்களை பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் சில முறை அலர்ட் தரும். அதன் பிறகே வாட்ஸ்அப் இயங்காமல் போகும்.

தற்போது Android OSஇல் 5.0 மற்றும் அதற்கு அடுத்து வந்த வெர்ஷன்கள், ஆப்பிள் ஐஓஎஸில் 12 மற்றும் மற்றும் அதற்கு அடுத்து வந்த வெர்ஷன்கள், JioPhone மற்றும் JioPhone 2 உட்பட KaiOS 2.5.0 வெர்ஷன்களில் இது வேலை செய்யும்.

Leave a Comment