ஐபோன் விலை 7.5 லட்சமா.. இந்தியாவில் பரவாயில்ல போலயே! இந்த நாட்டில் விலையை கேட்டால் தலையே சுத்துது

ஐபோன் விலை 7.5 லட்சமா.. இந்தியாவில் பரவாயில்ல போலயே! இந்த நாட்டில் விலையை கேட்டால் தலையே சுத்துது

Last Updated on: 24th September 2023, 04:15 pm

அமெரிக்காவில் ஐபோன் 15இன் விலை $799 (சுமார் ரூ. 66,208) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ளஸ் விலை $899 (சுமார் ரூ. 74,495) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபோன்கள் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மொபைல் முறையே $999 (சுமார் ₹82,781) மற்றும் $1,199 (சுமார் ₹99,354) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதே மாடல்களின் இந்தியா விலை அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 15 மாடல் ரூ. 79,900இல் இருந்து தொடங்குகிறது ஐபோன் 15 பிளஸ் ₹89,900க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஐபோன் 15 ப்ரோ ₹1,34,900க்கும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ₹1,59,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலையே சுத்துது: என்னது ஒரு மொபைல் 1.59 லட்ச ரூபாயா என்பதே இங்கே பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இதை நினைத்தே கவலைப்படாதீர்கள். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஐபோன் விலையைக் கேட்டால் உங்களுக்கு நிச்சயம் தலையே சுற்றிவிடும். அங்கே ஐபோன் ப்ரோ மேக்ஸ் 7.5 லட்ச பாக். ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கே 1 TB ஐபோன் 15 ப்ரோ வேரியண்ட் 7.5 லட்ச பாக். ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இது பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் எட்ட முடியாத விலையில் உள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பது ஒரு காரணம். மேலும், இறக்குமதி வரி தொடங்கிப் பல வரிகள் போடப்படுவதும் இதற்கு ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அது டிரெண்டாகி வருகிறது.

Leave a Comment