உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியர்

சமீபத்தில், உலக பணக்காரர்கள் பட்டியல் ஒன்று வெளியானது. அதைப்போலவே உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் வள்ளல்கள் குறித்த ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர், Warren Buffett. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ்.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியரும் இருக்கிறார்.

ஆம், உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிப்பவர், அசிம் பிரேம்ஜி.விப்ரோ நிறுவனத்தின் தலைவரான பிரேம்ஜி, 2020 நிலவரப்படி, 7904 கோடி ரூபாய் (இந்தியப் பணம்) நன்கொடை வழங்கி, அதிக நன்கொடை வழங்கும் இந்தியர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

அதாவது, நாளொன்றிற்கு 22 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார் பிரேம்ஜி. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் 2022ஆம் ஆண்டின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times