21.9 C
Munich
Saturday, September 7, 2024

உலகின் பெஸ்ட் 100 நிறுவனங்கள்! லிஸ்டில் இடம் பெற்ற ஒரே இந்திய கம்பெனி! அடடே இதை யாரும் எதிர்பார்க்கல

Must read

Last Updated on: 15th September 2023, 08:42 pm

டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் டாப் 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து வெறும் ஒரு நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. அது எந்த கம்பெனி என்பது குறித்துப் பார்க்கலாம்.

டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டும் டைம் நிறுவனமான ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து 2023ஆம் ஆண்டின் உலகின் டாப் 100 நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

இதில் டாப் 10 இடங்களில் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களே இடம் பெற்றுள்ளது.. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த டாப் 100 நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனம் மட்டுமே இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டாப் நிறுவனங்கள்: இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆப்பிள் நிறுவனமும் மூன்றாவது இடத்தை ஆல்பாபெட் (கூகுள் தாய் நிறுவனம்) பிடித்துள்ளது. இதில் 4ஆவது இடத்தில் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) பிடித்து இருக்கிறது. மேலும், அயர்லாந்தை சேர்ந்த அசென்சர் நிறுவனம் 5ஆவது இடத்தில் இருக்கிறது. பைசர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எலக்டிசைட் டி பிரான்ஸ் ஆகியவை முறையே 6 முதல் 8 வரையிலான இடங்களில் உள்ளது.BMW மற்றும் டெல் ஆகிய நிறுவனங்கள் டாப் 10இல் கடைசி இரண்டு இடங்களில் இடம் பிடித்துள்ளன. இந்த 10 இடங்களில் அமெரிக்காவில் இருந்து 7 நிறுவனங்கள் இருக்கிறது. அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து ஒரு நிறுவனம் இடம் பிடித்துள்ளது.

மொத்தம் 750: இந்தப் பட்டியலில் உலகத்தை மாற்றும் நிறுவனங்கள் என்று 750 நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளன. இவை உலகப் பொருளாதாரம் குறித்து அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. இதில் டாப் 100 நிறுவனங்களில் தான் ஒரே ஒரு இந்திய நிறுவனம் மட்டும் இடம் பெற்றுள்ளது. வருவாய் வளர்ச்சி, பணியாளர் திருப்தி, வேலை செய்யும் சூழல் எனப் பலவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.ஒரு காலத்தில் உற்பத்தி மற்றும் நுகர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே இந்தப் பட்டியலில் டாப் இடங்களில் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி மற்றும் பிஸ்னஸ் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இது உலக பொருளாதாரம் எந்த டிரெண்டை நோக்கி நகர்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

எந்த அடிப்படை: இது குறித்து டைம் இதழ், “தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டன… ஏனென்றால் விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது டெக் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு ரொம்பவே குறைவு. அதேபோல தங்கள் பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும் டெக் நிறுவனங்கள் நல்ல இடத்தில் உள்ளன. இதில் முதல் 4 இடத்தில் வந்த நிறுவனங்களில் ஊழியர்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய லாபத்தை அடைந்துள்ளன. அதேநேரம் அவர்கள் தொடர்ந்து கார்பன் உமிழ்வைக் குறைப்பது, பெண்களுக்கு அதிகளவில் வேலை தருவது போன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

ஒரே இந்திய நிறுவனம்: இந்தப் பட்டியலில் டாப் 100இல் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு நிறுவனம் தான் இடம் பிடித்துள்ளது. அதுதான் இன்ஃபோசிஸ். இவர்கள் 64ஆவது இடத்தை பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அந்த 750 நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 7 நிறுவனங்கள் உள்ளன.

அதாவது இந்த லிஸ்டில் விப்ரோ 174வது இடத்திலும், மஹிந்திரா குழுமம் 210வது இடத்திலும் உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 248வது இடத்தில் இருக்கும் நிலையில், HCL டெக்னாலஜிஸ் 262வது இடத்திலும், எச்டிஎஃப்சி வங்கி 418வது இடத்திலும் இருக்கிறது. அதேபோல WNS குளோபல் சர்வீசஸ் 596வது இடத்திலும், ஐடிசி 596வது இடத்திலும் உள்ளன.

- Advertisement -spot_img

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article