கொத்தவரங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கொத்தவரங்காய் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாது, இன்னும் நிறைய ஊட்டச்சத்து நன்மைகளையும் கொடுக்கிறது.
எடை குறைக்க உதவும் கொத்தவரங்காய்
உணவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம். எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். அதைத்தாண்டி சில உணவுகளும் அதற்கு உதவி செய்யும்.கொத்தவரங்காய் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகச்சிறந்த உணவு என்று சொல்லலாம். அதில் நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் மினரல்களும் அதிகம்.
கர்ப்ப கால ஆரோக்கியம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு ஏற்ற காய்கறிகளில் கொத்தவரங்காய் மிகச்சிறப்பானது.கொத்தவரங்காயில் ஃபோலிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது உடலில் மற்ற ஊட்டச்சத்துக்களைச் சரியாக உறிஞ்சிக் கொள்ளவும் போதிய அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்களைப் பெறவும் உதவி செய்யும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும்
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போதும் வேறு சில காரணங்களாலும் ரத்த ஓட்டத்தில் தடை உண்டாகும். ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுவதால் நரம்பு மண்டலம் தொடங்கி, உடலில் பல்வேறு பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது.இந்த ரத்த ஓட்டத்தை சீர்செய்ய கொத்தவரங்காயை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ரத்தத்தில் ஆக்சிஜனைக் கடத்தவும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவி செய்யும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
கொத்தவரங்காய் ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியாகக் கொண்ட காய். குறிப்பாக வைட்டமின் சி வைட்டமின் கே, மாங்கனீசு, ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.அதோடு டயட்டரி ஃபைபரும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து.ஆகியவையும் நிறைந்தது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.