8.8 C
Munich
Monday, October 14, 2024

இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து வியட்நாமும் அறிவித்தது.. விசா தேவை இல்லையாம்… இனிமே இந்தியர்களுக்கு ஜாலிதான்!

இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து வியட்நாமும் அறிவித்தது.. விசா தேவை இல்லையாம்… இனிமே இந்தியர்களுக்கு ஜாலிதான்!

Last Updated on: 24th November 2023, 09:19 pm

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லா நுழைவுக்கு சமீபத்தில் அனுமதி அளித்தனர். இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் இந்த அறிவிப்புக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அதே வாய்ப்பை வியட்நாமும் வழங்கவுள்ளது. அண்டை நாடான வியட்நாம் விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை புரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வியட்நாம் அரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் Nguyen Van Hung, இந்தியர்கள் மற்றும் சீனர்களை குறுகிய காலத்திற்கு விசா இல்லாமல் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியர்களுக்கு விசா ஃபிரி என்ட்ரி கொடுக்க வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விசா இல்லாமல் வியட்நாமுக்கு செல்ல முடியும். தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணையவுள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், வியட்நாமுக்கு சுமார் 10 மில்லியன் பார்வையாளர்கள் சென்றுள்ளனர். இது கணிசமான அதிகரிப்பு என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இதே காலத்தை விட சுமார் 4.6 மடங்கு அதிகம் என்றும் வியட்நாம் அரசு அறிவித்துள்ளது.

2023 ஆண்டின் இறுதியில் வியட்நாம் இந்த எண்ணிக்கையை அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் அதைவிட அதிகமாக தற்போது பார்வையாளர்களை பெற்றுள்ளது. தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் சமீபத்தில் தான் இந்தியாவிற்கான விசா விலக்குகளை அறிவித்தன. நவம்பர் 10ஆம் தேதி முதல் இந்தியப் பயணிகளுக்கான விசா விலக்கை தாய்லாந்து அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த விசா விலக்கு நடைமுறையின் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்க முடியும்.

2024 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்றும் அறிவித்தது. மேலும் இதற்கான தேவை அதிகரித்தால் இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் இலங்கை அரசு, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற ஏழு நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு விசா இல்லாத என்ட்ரியை அனுமதிக்கும் திட்டத்தை அக்டோபரில் அறிமுகப்படுத்தியது. இலங்கை அரசின் இந்தத் திட்டம் மார்ச் 31, 2024 வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here