இந்தோனேசியாவில் இடைவிடாமல் உலுக்கும் அதிசக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.2 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் இடைவிடாமல் உலுக்கும் அதிசக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.2 ஆக பதிவு!

Last Updated on: 8th November 2023, 07:23 pm

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு பெரும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது

2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடலுக்கு அடியே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்தான் தெற்காசியாவையே பேரழிவுக்குள்ளாக்கியது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம் (ரிக்டரில் 9.3) மிக பயங்கரமான சுனாமி பேரலைகளை உருவாக்கியது. இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை தெற்காசிய நாடுகளை மிகப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கியது இந்த 2004 சுனாமி. இந்த சுனாமி பேரழிவால் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் நிலைமையே என்ன என தெரியாமல் கடலோடு கடலாக கரைந்து போயினர்.

இதனாலேயே இந்தோனேசியா நிலநடுக்கம் என்பது தெற்காசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்குகிறது. இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரிக்டரில் 7.0 அலகாக மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 3-வதாக ரிக்டரில் 5.1 அலகு ரிக்டரும் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று பண்டா கடற்பரப்பில் மற்றொரு அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 அலகுகளாக பதிவாகி இருந்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாம் எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.

Leave a Comment