26.5 C
Munich
Saturday, September 7, 2024

இந்தியாவுக்கு போக வேண்டாம்!” கனடா ஷாக்கிங் அறிவிப்பு! உச்சக்கட்டத்தில் மோதல்! அடுத்து என்ன நடக்கும்

Must read

Last Updated on: 20th September 2023, 01:12 pm

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இந்தியா கானடா நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் சொன்னதே இது அத்தனைக்கும் காரணமாக இருந்தது. இதற்கிடையே இந்த மோதலின் அடுத்த கட்டமாகக் கனடா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடா அரசு அறிவிப்பு: இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கிறது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த குறிப்பில், இந்தியாவில் வசிக்கும் கனடா மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

கனடா அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டினர் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்.. அங்கே பாதுகாப்பு சார்ந்து சில கவலைகள் உள்ளன. அல்லது அந்த நிலைமை விரைவாக மாறக்கூடும். எல்லா நேரங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

அடுத்த கட்டத்திற்குச் செல்லும் மோதல்: அங்குள்ள உள்ளூர் ஊடகங்களைத் தொடர்ந்து பாருங்கள்.. அதில் அதிகாரிகள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நாட்டில் உள்நாட்டு மோதல் மிக மோசமாகச் சென்றால்.. அல்லது அங்கே மோதல் சூழல் நிலவினால் மட்டுமே இதுபோன்ற அறிக்கை வெளியாகும். ஆனால், இந்தியாவில் அப்படி எந்தவொரு சூழலும் இல்லாத நிலையில், கனடா இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மேலும், இந்தியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா அரசு தனது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அவர்கள், “உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தில் ஏற்படக் கூடும். குடும்பம் அல்லது வணிகத் தேவைகளுக்கு இங்கே செல்ல வேண்டுமா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே அங்கு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக அங்கே இருக்க வேண்டுமா என்பதைச் சிந்தியுங்கள்.. அங்கே இருக்கத் தேவையில்லை என்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வெளியேறுங்கள்: இந்தியாவில் இருக்கும் கனடா மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கணிக்கவே முடியாத பாதுகாப்பு சூழல் நிலவுவதால் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதம், உள்நாட்டுக் கலவரம் மற்றும் கடத்தல் அச்சுறுத்தல் உள்ளதால் லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கூறியதற்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ட்ரூடோ அரசு கனடாவில் இருந்த இந்தியத் தூதர் ஒருவரை வெளியேற்றிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதர் ஒருவரை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article