Last Updated on: 6th November 2023, 06:00 pm
ஜப்பான் நாட்டில் வெளியே இருந்து உள்ளே பார்த்தால் அப்படியே தெரிவது போன்ற கழிப்பறைகள் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன.. ஏன் இப்படி அமைத்துள்ளனர் என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நம்ம ஊரில் வெளியே செல்லும் போது திடீரென கழிவறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் சிரமம் தான். அருகில் எதாவது ஹோட்டல் அல்லது மால் இருந்தால் கூட அதைப் பயன்படுத்தலாம்.
அதுவும் இல்லையென்றால் ரொம்பவே தர்மசங்கடம் தான். நம்ம ஊரில் பெரும்பாலும் பொது இடங்களில் கழிப்பறைகளே இருக்காது. அப்படியே இருந்தாலும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமானதாக இருக்கும்.
ஜப்பான் கழிவறை: ஆனால், எல்லாவற்றையும் புதிதாகக் கண்டுபிடிக்கும் ஜப்பானில் பொது இடத்தில் இருக்கும் கழிவறை புதிய முறையைக் கையாண்டுள்ளனர். இங்கே போட்டோவில் இருப்பது போலத் தான் ஜப்பானில் பொது இடங்களில் கழிவரை இருக்கும். ஆம், கண்ணாடியில் தான் கழிவறை இருக்கும். எது பொது இடத்தில் கண்ணாடியில் கழிவறையா என நாம் ஷாக் ஆவோம்.ஆனால், அங்குள்ள பொதுமக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனனடா இது.. இதைப் பயன்படுத்தினால் வெளியே அப்படியே தெரியுமா என்று நீங்கள் அலறுவது புரிகிறது. ஆனால், இதற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. அதைக் கேட்டீர்கள் என்றால் நீங்ளே ஷாக் ஆகிப் போவீர்கள். கழிவறைகளுக்குக் கூட நம்பவே முடியாத தொழில்நுட்பத்தை ஜப்பான் பயன்படுத்தி இருக்கிறது.
இதென்ன புதுசா இருக்கு: “டோக்கியோ டாய்லெட் ப்ராஜெக்ட்” என்று தொண்டு நிறுவனம் தான் இந்த கழிவறைகளை அமைத்துள்ளனர். பொது இடங்களில் இருக்கும் கழிவறைகள் எப்போதும் சுத்தமாக இருக்காது என்று பொதுமக்கள் அலறி ஓடும் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இதைச் செய்துள்ளனர். இதில் இருக்கும் கண்ணாடி எல்லாம் சாதாரண கண்ணாடி இல்லை “ஸ்மார்ட் கிளாஸ்” ஆகும்.இந்த ஸ்மார்ட் கிளாஸ்களை பயன்படுத்தித் தான் அவர்கள் கழிப்பறையை முழுமையாகக் கட்டியுள்ளனர். இதன் மூலம் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்த விரும்புவோர்.. அது சுத்தமாக இருக்கிறதா என்ன என்பதை வெளியில் இருந்தபடியே பார்க்கலாம். இதன் மூலம் பொது கழிவறைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதே அவர்கள் நம்பிக்கை.
எப்படி வேலை செய்யும்: எல்லாம் சரி, வெளியே அப்படித் தெரிந்தால் எப்படி இதைப் பயன்படுத்துவார்கள் என உங்களுக்குச் சந்தேகம் வரலாம். இது ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒருவர் உள்ளே சென்று கதவைப் பூட்டியவுடன், இந்த கண்ணாடி தனது இயல்பை மாற்றிக் கொள்ளும்.
அதன் பிறகு வெளியே இருந்து உள்ளே பார்த்தாலும் தெரியாது. உள்ளே இருந்து வெளியே பார்த்தாலும் தெரியாது. மீண்டும் கதவைத் திறக்கும் வரை இப்படியே தான் இருக்குமாம். இதன் மூலம் அச்சமின்றி ஒருவரால் கழிவறையைப் பயன்படுத்த முடியும்.
இப்போது ஜப்பானில் சில இடங்களில் மட்டுமே இந்த வகையான கழிவறைகளை வைத்துள்ளார்களாம். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களிலும் இதேபோன்ற கழிவறைகளை அமைப்பது குறித்து முடிவு செய்வார்கள். என்னதான் இது பார்க்கப் புதுமையாக இருக்கிறது. இதன் மூலம் பொது கழிவறைகளைப் பொதுமக்களை அதிகம் பயன்படுத்த வைக்க முடியும் என்கிறார்கள்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.