Last Updated on: 29th November 2023, 11:18 am
பன்றி வைரஸ் என்று அழைக்கப்படும் H1N2 வைரஸ் இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம்(UKHSA) தெரிவித்துள்ளது.H1N2 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உடல்நலக்குறைவால் லேசான அசௌகரியத்தை அனுபவித்தார். ஆனால், அதன் பிறகு, அவர் பூரண குணமடைந்துவிட்டார் என்று UKHSA கூறியுள்ளது,H1N1, H1N2 மற்றும் H1N3 ஆகியவை பன்றிகளில் காணப்படும் மூன்று முக்கிய வகை காய்ச்சல் உண்டாக்கும் வைரஸுகளாகும்.
நோய்வாய்ப்பட்ட பன்றிகளை தொடர்பு கொள்வதால் இந்த வகை வைரஸுகள் மனிதர்களுக்கும் பரவக்கூடும்.இந்நிலையில், இங்கிலாந்தில் பதிவாகி இருக்கும் H1N2 மனித தொற்று தேசிய காய்ச்சல் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டதாகும். எனினும், H1N2 எப்படி அந்த மனிதருக்கு பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வடக்கு யார்க்ஷயர் மருத்துவமனைகளில் கண்காணிப்பு அதிகரிப்புஎனவே, மேலும் பலர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய வட்டாரங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வடக்கு யார்க்ஷயர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பேசிய UKHSA சம்பவ இயக்குனர் மீரா சந்த், “இங்கிலாந்தில் மனிதர்களில் இந்த வைரஸைக் கண்டறிவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் இது பன்றிகளில் கண்டறியப்பட்ட வைரஸ்களைப் போலவே உள்ளது.” என்று கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டில், ஒரு பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்தது.பன்றிகள், பறவைகள் மற்றும் மனிதர்களில் காணப்படும் வைரஸ்களில் இருக்கும் மரபணுப் பொருட்களைக் கொண்ட வைரஸால் இந்த தொற்றுநோய் ஏற்பட்டது.