Last Updated on: 1st June 2023, 10:43 am
ஆஸ்திரியா நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் தீ விபத்து ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் மோட்லிங் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மக்கள் வருகை அதிகமாக இருக்கும் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் பற்றிய தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
.3 பேர் உயிரிழப்புமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினார்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 3 நோயாளிகள் வரை இந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.