Last Updated on: 7th September 2023, 09:14 am
Visit விசாவை VFS அலுவலகத்தில் ஸ்டாம்பிங் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன?
- அப்பாயின்மென்ட் காப்பி
- ஸ்பான்சர் இகாம காப்பி (ஒரு நபருக்கு ஒரு காப்பி)
- ஸ்பான்சர் பாஸ்போர்ட் காப்பி (ஒரு நபருக்கு ஒரு காப்பி)
- சவுதியில் சேம்பர் செய்த உடன் வந்த விசா காப்பி (ஒரு நபருக்கு ஒரு காப்பி)
- மனைவி /குழந்தைகள் அம்மா /அப்பா அல்லது அவர்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் அதனுடைய காப்பி.
- பழைய பாஸ்போர்ட் /எக்ஸ்பைரி பாஸ்போர்ட் இருந்தால் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.(பழைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் போலீஸிடம் எஃப் ஐ ஆர் காப்பி வாங்கி எடுத்துச் செல்ல வேண்டும்)
- மனைவியுடைய பெயர் கணவருடைய பாஸ்போர்ட்டில் இல்லை அல்லது கணவருடைய பாஸ்போர்ட்டில் மனைவியுடைய பெயர் இல்லை என்றால் ஒரிஜினல் மேரேஜ் சர்டிபிகேட் சவுதி எம்பஸில் அட்டஸ்ட் செய்த ஒரிஜினலை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.(இரண்டு பேருடைய பாஸ்போர்ட்டிலும் பெயர் சரியாக இருந்தால் மேரேஜ் சர்டிபிகேட் தேவையில்லை.)
- மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட இரண்டு போட்டோக்களை எடுத்துச் செல்ல வேண்டும் .கண்ணாடி போட்டு போட்டோ எடுக்க கூடாது. பெண்களுக்கு காது தெரிகின்ற மாதிரி போட்டோ இருக்க வேண்டும்.
- மனைவி ,குழந்தை பெற்றோர்களுடைய பெயரில் ஒரு எழுத்து திருத்தம் என்றாலும் உங்களுடைய அப்ளிகேஷனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
- பணத்தை கையிலும் எடுத்துச் செல்லலாம் கார்டிலும் ஏற்றுக் கொள்வார்கள்.(Rs 15,000 (age 0-50) Rs 16,000 to 20,000 (50-80age)
Resident Family விசாவை VFS அலுவலகத்தில் ஸ்டாம்பிங் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன?
- அப்பாயின்மென்ட் காப்பி
- ஸ்பான்சர் இகாம காப்பி (ஒரு நபருக்கு ஒரு காப்பி)
- ஸ்பான்சர் பாஸ்போர்ட் காப்பி (ஒரு நபருக்கு ஒரு காப்பி)
- சவுதியில் எடுத்த விசா காப்பி (yellow slip) (ஒரு நபருக்கு ஒரு காப்பி)
- மனைவி /குழந்தைகள் அவர்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் அதனுடைய காப்பி.
- குழந்தைகளுக்கு போலியோ சர்டிபிகேட் மும்பையில் சவுதி எம்பஸியிடம் அட்டெஸ்ட் செய்திருக்க வேண்டும்.(0 to 12Age)
- Wafid website la Appointment எடுத்து மெடிக்கல் செய்த Receipt எடுத்துச் செல்ல வேண்டும்.(12Age above)
- பழைய பாஸ்போர்ட் /எக்ஸ்பைரி பாஸ்போர்ட் இருந்தால் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.(பழைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் போலீஸிடம் எஃப் ஐ ஆர் காப்பி வாங்கி எடுத்துச் செல்ல வேண்டும்)
- மனைவியுடைய பெயர் கணவருடைய பாஸ்போர்ட்டில் இல்லை அல்லது கணவருடைய பாஸ்போர்ட்டில் மனைவியுடைய பெயர் இல்லை என்றால் ஒரிஜினல் மேரேஜ் சர்டிபிகேட் சவுதி எம்பஸில் அட்டஸ்ட் செய்த ஒரிஜினலை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.(இரண்டு பேருடைய பாஸ்போர்ட்டிலும் பெயர் சரியாக இருந்தால் மேரேஜ் சர்டிபிகேட் தேவையில்லை.)
- மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட இரண்டு போட்டோக்களை எடுத்துச் செல்ல வேண்டும். கண்ணாடி போட்டு போட்டோ எடுக்க கூடாது. பெண்களுக்கு காது தெரிகின்ற மாதிரி போட்டோ இருக்க வேண்டும்.
- மனைவி குழந்தை பெயரில் ஒரு எழுத்து திருத்தம் என்றாலும் உங்களுடைய அப்ளிகேஷனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
- பணத்தை கையிலும் எடுத்துச் செல்லலாம் கார்டிலும் ஏற்றுக் கொள்வார்கள்.(INR 6000 to 8000 (Residen visa)
தகவல்: சவூதிவாழ் தமிழ்