Last Updated on: 20th July 2023, 10:32 am
இந்த அண்டம், அதில் உள்ள கிரகங்கள், பூமி, எல்லாம் எப்படி உருவானது என்ற பல வாதங்கள் இருந்தாலும் உண்மை என்ன என்பதற்கான ஆய்வு இன்றும் நடந்து வருகிறது. உலகில் இன்று ஏழு கண்டங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டங்கள் எப்படி இருந்தன, எத்தனை இருந்தன என்று நமக்குத் தெரியாது.
தமிழகத்திற்கு கீழே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வரை லெமுரியா கண்டம் இருந்ததாகக் கூட சொல்கின்றனர். ஆனால் அதை முழுவதும் உண்மை என்று நிரூபிக்க முடியவில்லை. அதே போல இப்போது எட்டாவது கூட ஒரு கன்னடம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. உலகின் எட்டாவது கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் சுமார் 375 ஆண்டுகள் எடுத்தனர் என்ற செய்தி பரவி வருகிறது. அதை பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.
உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அதைச் சுற்றி மர்மங்கள் உள்ளன. புவியியலாளர்கள் பசிபிக் பெருங்கடலுக்குள் ஆழமான நிலத்தின் பெரும்பகுதியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த கண்டத்தின் 94% உண்மையில் நீருக்கடியில் இருப்பதாக ஒரு கண்டுபிடிப்பு சொல்கிறது. அந்த கண்டுபிடிப்புடன், உலகின் 8 வது கண்டத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இப்போது உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகின் பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல மர்மங்கள் உள்ளன. இப்போது அதில் ஒரு கண்டமே ஒளிந்திருப்பதாக கூறுகின்றனர்.
Zealandia கண்டம் பற்றி..உலகின் எட்டாவது கண்டமான ஜிலாண்டியா, பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைச் சுற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அதை ஒரு கண்டம் என்று அழைக்க வேண்டுமா இல்லையா என்பதே அதில் பிரதானமான விவாதமாக இருக்கின்றன.
கண்டம்’ என்ற வார்த்தையே விவாதத்திற்குரியதாக இருந்தாலும், ஒரு கண்டம் தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது 1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும், வரையறையின்படி, ஒரு கண்டம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளாவது உயர்ந்து நிலம் வெளியில் தெரிவதாக இருக்க வேண்டும். ஆனால் ஜிலாண்டியா கடல் மட்ட உயர்வைத் தவிர மற்ற அனைத்து அளவுகோலையும் பூர்த்தி செய்கிறது என்பதால் தான் இதை கண்டம் என்று அழைக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் நடந்து வருகிறது.
ஜிலாண்டியா கண்ட பகுதியாக நினைக்கும் இடத்தில் இருந்து பழமையான பாறை மற்றும் மேலோடு மாதிரிகள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே பார்க்கும், மற்ற கண்டங்களின் மேலோடு தோராயமாக 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது தான். மேலும், விஞ்ஞானிகள் நம்பியதை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று கூறும் பல கோட்பாடுகள் அதைச் சுற்றி உள்ளன.விஞ்ஞானிகள் உண்மையில் நீண்ட காலமாக Zealandia என்ற பகுதியின் வரலாறு மற்றும் புவியியல் பற்றி கண்டுபிடிக்க முயற்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இறுதியாக, சுமார் 375 ஆண்டுகளுக்குப் பிறகு, புவியியலாளர்கள் 2017 இல் இந்த கண்டத்தைக் கண்டுபிடித்தனர். அதை பற்றிய விரிவான ஆய்வுகள் தான் இப்போது வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இக்கண்டத்தைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். Zelandia பற்றி தீர்க்கப்பட வேண்டிய மற்றொரு மர்மம் என்னவென்றால், அது எப்போது நீருக்கடியில் சென்றது? எதிர்காலத்தில் கூடுதல் பதில்களை பெற முடியும். அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் அந்த கண்டத்திற்கும் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியம் இல்லை.