21.9 C
Munich
Saturday, September 7, 2024

கழுத்து சுற்றி மரு மாதிரி தோல் முடிச்சு தொங்குதா, இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க!

Must read

Last Updated on: 10th July 2023, 12:05 pm

சருமத்தில் சிறு முடிச்சுகள் போன்று தொங்குவது தோல் குறிச்சொற்கள் skin tags என்று அழைக்கப்படுகிறது..கொலாஜன் இழைகள் தளரும் நிலை இது. இது வயதானவர்கள், அதிக எடை கொண்டவர்களிடையே பார்க்கலாம். இது இடுப்பு, கழுத்து, கண் இமைகள், அக்குள், மார்பகங்கள், தோல் மடிப்புகள் போன்ற இடங்களில் உருவாகின்றன. இது பாதிப்பில்லாதது என்றாலும் ஆடைகளால் தேய்க்கப்படும் போது வலியை உண்டு செய்யலாம்.

​skin tags போக்க வீட்டுவைத்தியம் உதவுமா?​

சரும பிரச்சனைகள் இந்த skin tags பொறுத்தவரை நீங்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியதில்லை. தீவிரமான நிலை இல்லாத நிலையில் வீட்டு வைத்தியம் மூலம் இதை சரி செய்துவிடலாம்.

பெரும்பாலான நிலையில் வீட்டு வைத்தியம் தொடர்ந்து செய்வதோடு தோல் குறியின் அளவு சுருங்கி விழும் வரை உலர்த்துவது பலன் அளிக்கும். அதற்கு உதவும் வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.

​டீ ட்ரீ ஆயில் skin tag போக எப்படி பயன்படுத்துவது?​

டீ ட்ரீ ஆயில் என்பது மர எண்ணெய். தோல் நோய்களில் சிகிச்சை அளிக்க இவை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இது skin tags அகற்ற உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. கெரியர் எண்ணெயில் நீர்த்து சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சிறு காட்டன் பஞ்சு எடுத்து சில துளி எண்ணெயில் நனைத்து அதை சருமத்தில் முடிச்சு தோல் குறிச்சொல் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். பிறகு அங்கு பேண்டேஜ் ஒட்ட வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று முறை 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்தால் பல நாட்கள் அல்லது வாரம் வரை ஆகலாம். உணர்திறன் வாய்ந்த சருமத்தினர் இதை பயன்படுத்தக்கூடாது.

​skin tag உதிர்வதற்கு ஆப்பிள் சாறு வினிகர் உதவுமா?​

ஆப்பிள் சீடர் வினிக அமிலத்தன்மை கொண்டது. தோல் குறியை சுற்றியுள்ள திசுக்களை உடைத்து உதிர செய்துவிடும். இது குறித்து சிறிய ஆய்வு ஒன்று நடந்தது.

எப்படி பயன்படுத்துவது?

இவர்கள் வினிகரில் ஒரு பருத்தி உருண்டையை நனைத்து எடுத்து 10 நிமிடங்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறை என ஒட்டி வர வேண்டும். அல்லது பருத்தி துணியை ஆப்பிள் சீடர் வினிகரில் ஊறவைத்து தோல் டேக் மீது வைக்கவும். பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து சருமத்தை கழுவவும். இரண்டு வாரங்கள் இதை செய்யலாம். இதை கண்களுக்கு அருகில் பயன்படுத்தக்கூடாது.​

skin tag அகற்ற க்ரீம்கள் உதவுமா? என்ன பயன்படுத்துவது?​

skin tag இருக்கும் போது சாலிசிலிக் அமிலம் மற்றும் தேயிலை மர எண்ணெய் கொண்ட தயாரிப்புகளை தவிர்க்க வேண்டும். இவை சருமத்தை எரிச்சலூட்டலாம். தோல் தொடர்பு அழற்சியை ஏற்படுத்தலாம்.இந்த க்ரீம்கள் சிலவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் உண்டு. ஆல்கஹால் சுத்தம் செய்து க்ரீமை பயன்படுத்துவதற்கு முன்பு சருமம் முழுமையாக உறிஞ்சுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இது 2 அல்லது 3 வாரங்களுக்குள் விழுந்துவிடும்.​

Freezing kits பயன்படுத்தி skin tag அகற்ற முடியுமா?​

Freezing kit என்பது மருத்துவ நிபுணர் தோல் திசுக்களை அழிக்க திரவ நைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். இது கிரையோதெரபி என்று அழைக்கப்படுகிறது. இதில் -320 .8 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வெப்பநிலை இருக்கலாம். இந்த வகை ஸ்கின் டேக் பிரச்சனைக்கு -4 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் -58 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பநிலை தேவைப்படலாம்.இதை வீட்டில் பயன்படுத்தும் போது கவனம் தேவை. ஸ்ப்ரே பயன்படுத்தும் போது ஸ்கின் டேக் சுற்றி உள்ள இடங்களை தொட விடாமல் தவிர்க்கவும். மாறாக அந்த இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்க உதவும்.​

பூண்டு வெச்சு skin tag போக்கமுடியுமா?

பூண்டு வீக்கத்தை குறைக்க்க உதவும். இது தோலின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பூண்டு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

பூண்டு நசுக்கி ஸ்கின் டேக் பகுதியில் தடவி இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். இது படிப்படியாக ஸ்கின் டேக் சுருங்க செய்யும். இவை மறையும் வரை தொடர்ந்து செய்யவும்.

​skin tag நீங்க மருத்துவ சிகிச்சைகள் உண்டா?

மிக தீவிரமான நிலையில் நீங்கள் வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பதை தவிர்த்துநிபுணரை அணுகலாம்.

Ligation : அறுவை சிகிச்சை மூலம் ஸ்கின் டேக் சுற்றி நூலை கட்டி விடுவார்கள். அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைப்படுத்தி பிறகு நூலை எடுப்பார்கள். அது உதிர்ந்துவிடும்.

Cauterization : இம்முறையில் இந்த ஸ்கின் டேக் எரிக்கப்படும். இரண்டு முறையில் இவை சரியாகிவிடும்.

Cryotherapy : இம்முறையில் ஸ்கின் டேக் முடக்க திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதில் ஒன்று அல்லது இரண்டு முறை சிகிச்சை அளிக்கப்படும்.

Excision: இதில் ஒரு பிளேட் பயன்படுத்தலாம்

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article