இந்த 8 பழக்கம் உங்களுக்கு இருந்தா உங்க நோயெதிர்ப்பு மண்டலம் ரொம்ப பலவீனமா இருக்குமாம்… இனி பண்ணாதீங்க…

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதற்கு அடிப்படையில் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஆரோக்கியமற்ற உணவுமுறை, மற்றொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டிலும் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும். உடலில் ல நோய்கள் உண்டாகக் காரணமாக இருக்கும்

​ஆல்கஹால்

அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது குடல் தசைகளை மோசமாக்கும். வயிற்றுத் தசைகளில் டாக்சின்களை அதிகரிக்கச் செய்யும்.

எல்லாவற்றையும விட ஆல்கஹால் உங்களுடைய கல்லீரலை சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதனால் வயிறு மற்றும் குடல் நோய்கள் ஏற்படக்கூடும்.

​புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிரி என்றே சொல்லலாம். புகைப்பிடிப்பது உடலின் பல்வேறு நோய்க்குறிகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.

புகைபபிடிப்பதால் ரத்தம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் டாக்சின்கள் அதிகரிக்கும். குறிப்பாக நுரையீரலை சேதப்படுத்தி சுவாச மண்டலத்தை பலவீனப்படுத்தும். அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் பலவீனமடையச் செய்யும்.

​தூக்கமின்மை

தினமும் குறைந்தது 7-9 மணி நேரமாவது தூங்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்கி எழுவது மட்டுமின்றி, மிகக் குறைவான அளவு தூக்கமும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

போதிய அளவு தூக்கமின்மை பிரச்சினை நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் மோசமாக்கும். அதனால் குறைந்தபட்சம் 7-9 மணி நேர இரவு தூக்கம் அவசியம்.

​ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள் சாப்பிடும் போது உடலில் பல்வேறு நோய்களும் நோய் நிலைகளும் உண்டாகின்றன.

குறிப்பாக, உடல் பருமன், உயர் கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும்.

​மன அழுத்தம்

அதிகப்படியான மன அழுத்தமும் கூட நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும்.

மன அழுத்தம் என்பது மன ரீதியான பிரச்சினை தானே, அது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம். மன ஆரோக்கியமும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். ஏனெனில் மன அழுத்தம் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை, மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறது.

​அதிக உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி அதிலும் போதிய அளவு உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

அதேசமயம் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும் ஆபத்தானது தான். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும், அதிகமான எடை தூக்கும் பயிற்சி செய்வது ஆகியவை மூட்டுவலி மற்றும் தசைகளில் வலியை ஏற்படுத்தும். அதோடு நோயெதிர்ப்பு மண்டலமும் பலவீனமடையும்.

​அதிக மொபைல் பயன்பாடு

24 மணி நேரமும் ஸ்மார்ட்போனை கையில் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தான் இங்கு அதிகம். பகல் முழுக்க கம்ப்யூட்டர், இரவில் செல்போன் என ஸ்கிரீன் டைம் அதிகமாக இருப்பவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் மோசமடையும். அதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உங்களுடைய ஸ்கிரீன் டைமை குறைத்தே ஆக வேண்டும்.

​அதிக அளவு காஃபைன்

மிதமான அளவில் பிளாக் காபி குடிப்பது மூளையைச் சுறுசுறுப்பாக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவி செய்யும். ஆனால் அளவுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது அல்ல.

அளவுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஹைபர் டென்ஷன், இதயத் துடிப்பு வேகமாக இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times