22.4 C
Munich
Wednesday, July 17, 2024

ஆம்லா ஹேர் ஆயில் : இளநரை தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய் ரெசிபி.. ஆண்களும் யூஸ் பண்ணலாம்!

Must read

Last Updated on: 7th November 2023, 08:06 pm

கூந்தலை இயற்கையாக கருகருவென்று வைக்க நெல்லிக்காய் உதவும் என்று சொல்லபடுகிறது. இது வைட்டமின் சி மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நெல்லிக்காய் பாரம்பரிய இந்திய மருத்துவ முறையில் மிகவும் முக்கியமான தாவரமாகும்.

நெல்லிக்காய் எண்ணெய் முடி மற்றும் உச்சந்தலையில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நெல்லிக்காய் எண்ணெய் எப்படி தயாரிப்பது அவை உண்மையில் பயனளிக்கிறதா என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

​நெல்லிக்காய் எண்ணெய் முடி மற்றும் உச்சந்தலை நன்மைகள்.

​முடி வளர்ச்சியை தூண்டும்

உச்சந்தலையில் முடி வலுப்படுத்த செய்கிறது.

முடியிலிருந்து முன்கூட்டிய நிறமி இழப்புநரையை குறைக்கும்

பொடுகு மற்றும் உலர் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவும்.

உச்சந்தலை தொற்றுகளை தடுப்பது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காய் எண்ணெய் பக்கவிளைவுகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அரிதான சில சந்தர்ப்பங்களில் இது லிச்சென் ப்ளானஸ் பிக்மெண்டோசஸை தூண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புற ஊதா கதிர்வீச்சு மற்றும் இயற்கையாக கருமையான சருமம் உள்ளவர்களுக்கு நெல்லி எண்ணெய் வீக்கம் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. பரிசோதனைக்கு பிறகு இதை பயன்படுத்தலாம். நெல்லிக்காய் எண்ணெய் குழந்தைகள் முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.​

நெல்லிக்காய் எண்ணெய் குறித்து ஆய்வு சொல்வது என்ன?

நெல்லிக்காய் எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டவும்,முடி உதிர்தலை குறைக்கவும் முடியிலிருந்து முன்கூட்டிய நிறமி இழப்பை குறைக்கவும் உதவும். நெல்லிக்காய் முடிக்கு செய்யும் ஆரோக்கிய நன்மைகள் நவீன கால அறிவியலின் படி அதன் நன்மைகளை மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றன.2012 ஆம் ஆண்டு நெல்லிக்காய் எண்ணெய் 5 ஆல்ஃபா ரிடக்டேஸின் சக்திவாய்ந்த தடுப்பானாக இருப்பதாக 2012 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆண் வழுக்கைக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபைனாஸ்டரைடு என்ற மருந்து, 5- ஆல்ஃபா ரிடக்டேஸைத் தடுப்பதன் மூலமும் செயல்படுகிறது.​

நெல்லிக்காய் எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?​

வைட்டமின் சி

வைட்டமின் ஏ

பாலிபினால்கள்

அமினோ அமிலங்கள் (அலனைன், லைசின், புரோலின், அஸ்பார்டிக் அமிலம், குளுடாமிக் அமிலம்)

புரதங்கள்

கார்போஹைட்ரேட்டுகள்

கால்சியம்

பொட்டாசியம்

வெளிமம்

இரும்பு

கரோட்டின்

ஆல்கலாய்டுகள்

கலோட்டானின்கள்

பெக்டின்

​நெல்லிக்காய் எண்ணெய்:

நெல்லிக்காய்- கால் கிலோ (ஃப்ரெஷ்ஷாக இருக்கட்டும்)

பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் -100 ml

தேங்காயெண்ணெய் – 200 ml

நெல்லிக்காய் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெள்ளைத்துணியில் நெல்லித்துண்டுகளை உலரவிடவும். அதன் ஈரத்தன்மை இலேசாக குறையும் வரை வைக்கவும். அகன்ற அடிகனமான பாத்திரத்தில் இரண்டு எண்ணெயும் விட்டு நெல்லிக்காய் துண்டுகளை சேர்க்கவும். நெல்லிக்காய் சாறாகவும் எடுத்து எண்ணெயில் சேர்க்கலாம்

.எண்ணெய் பழுப்பு நிறமாக மாறும் வரை விடவும். நெல்லிச்சாறாக இருந்தால் அதன் சடசடப்பு அடங்கட்டும். அவை நன்றாக உலரும் வரை, அடுப்பை மிதமான தீயில் வைத்திருங்கள். பிறகு அதை இறக்கி நன்றாக ஆறவிடுங்கள். ஈரம்பட வேண்டாம். இந்த எண்ணெயை பாட்டிலில் ஊற்றி வைத்து உச்சந்தலையில் ஹேர் டானிக் ஆக பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் முடிக்கு சூப்பர் ஃபுட் என்று சொல்லப்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளவை.இது முடி உதிர்வைக்கட்டுப்படுத்தும் மற்றும் இயற்கையான கண்டிஷனராகும். நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளது.

இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.நெல்லிக்காயின் நன்மைகளை முழுவதுமாக பெறுவதற்கு இயற்கையான தூய்மையான தயாரிப்பை பயன்படுத்துங்கள். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடி செய்யவும். இந்த பொடியை வீட்டிலேயே மொத்தமாக செய்து வைத்துகொண்டு கூந்தல் பராமரிப்புக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தலாம்.

குறிப்பு

நெல்லிக்காய் சாற்றை எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும் போது அதன் தரத்தை பராமரிக்க சிறிய அளவில் தயாரித்து அவ்வபோது பயன்படுத்துங்கள்.

- Advertisement -spot_img

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article