Last Updated on: 12th July 2023, 02:53 pm
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்யலாம். பல்வேறு தள்ளுபடிகளையும் பெறலாம். உங்கள் வீட்டு வாசலுக்கே ஆர்டர் செய்த பொருள் வரும். ஆனாலும் இதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன. பண மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்களாகிய நீங்கள்தான் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் சலுகைகளைப் பெறும்போது, அந்த பொருட்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதையும், உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப தரம் இருப்பதையும், பொருட்கள் முறையான உத்திரவாதத்தால் பேக்கிங் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்துவது முக்கியம். ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது பல மோசடிகள் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஆன்லைன் மோசடியைத் தவிர்க்க நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
போலி ஆன்லைன் ஸ்டோர்!
மோசடி செய்பவர்கள் போலி ஷாப்பிங் இணையதளங்கள் அல்லது செயலிகளை உருவாக்கி உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. இந்தத் தளங்கள் பார்ப்பதற்கு உண்மையானவை போலத் தோன்றலாம். ஆனால் அவை உங்களின் முக்கியமான தகவல் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஷாப்பிங் செய்யும் தளம் உண்மையானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
போலியான விமர்சனங்கள்!
சிலர் போலியான இணையதளங்கள் மற்றும் பல தரமற்ற தயாரிப்புகள் குறித்து போலியான விமர்சனங்களை (ரிவ்யூ) அளிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஸ்டோர்களின் போலி மதிப்புரைகளை நம்புகிறார்கள். பின்னர் அவர்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த போலி மதிப்பாய்வின் மோசடியில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பான இணையதளம்!
உங்கள் கம்ப்யூட்டர் ஆன்டி வைரஸால் பாதுகாக்கப்படாவிட்டால், உங்கள் நிதித் தகவல் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. இது தவிர, பாதுகாப்பற்ற இணைய இணைப்பிலிருந்தும் தரவு திருடப்படும் அபாயமும் உள்ளது. எனவே பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்தவும். வயர்லெஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், அது என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பொது நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போது எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.vஷாப்பிங் தளத்தில் ஏதேனும் தனிப்பட்ட அல்லது கிரெடிட் கார்டு தகவலை உள்ளிடுவதற்கு முன், பக்கத்தில் உள்ள இணைய முகவரி “http:” அல்லது “https:” என்று தொடங்குகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.