Last Updated on: 25th June 2023, 10:01 am
எப்படி பூமியில் மனிதன் உயிர் வாழ நீர், நிலம், காற்று எப்படி முக்கியமோ அதேபோல் மனிதன் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக வாழ நீர் அவசியம்.
அதிகமான நீர் குடிப்பவர்களுக்கு எந்த நோய்யும் அருகில் அண்டாது.
அதேபோல் மருத்துவர்கள் ஆய்வுகளின் படி சூடான நீர் அருந்துபவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரி… தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
உடலை சுத்தம் செய்வதுடன், இளமையை நாம் தக்க வைத்துக் கொள்ளலாம்.
கெட்ட கொழுப்புகள் வெளியே உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
முகப்பருக்கள் அகன்று முகம் பளிச்சிடும்.
உங்கள் முடி செழித்து வளரும், முடி வேர்கள் வளர்ச்சி அடையும்.
உங்கள் இரத்த ஓட்டம் சீராகும்.
நரம்பு மண்டலங்கள் வலிமை பெறும்.
மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும். மூக்கடைப்பு, சளி, தொண்டை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.