Last Updated on: 29th May 2023, 11:48 am
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை.
இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார்.சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை.
அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார்.
ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார்.