Last Updated on: 9th June 2023, 09:51 pm
இருதய நோய் நிபுணரான 41 வயது டாக்டர் கவுரவ் காந்தி அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை சேர்ந்த இருதய நோய் நிபுணரான 41 வயது டாக்டர் கவுரவ் காந்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
டாக்டர் கவுரவ் காந்தி பணிபுரியும் குரு கோவிந்த்சிங் அரசு மருத்துவமனையில் அதிக அளவிலான இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
டாக்டர் கவுரவ் காந்தி தன்னுடைய வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் செவ்வாய்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சக மருத்துவர்கள் இரங்கல்:
தான் மருத்துவராக பயிற்சி செய்த தனியார் சாரதா மருத்துவமனையில் திங்கட்கிழமை நோயாளிகளை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த கவுரவ் காந்தி, இரவு உணவை உண்டுவிட்டு உறங்க சென்ற நிலையில், அடுத்த நாள் சுயநினைவு இழந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களால் கவனிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு டாக்டர் கவுரவ் காந்தி கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது இழப்பிற்கு அவரது சக மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர், மிகச் சிறந்த இருதய நிபுணராக கருதப்பட்ட டாக்டர் கவுரவ் காந்தி 41 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.